பக்கம் எண் :

838
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

பேசும் பாஷைகளில் கலந்திருக்கும் பல தமிழ் மொழிகளாலும் அவர்கள் பாடிக்கொண்டு வரும் சங்கீதத்தில் வழங்கிவரும் பன்னிரு சுரங்களாலும் பூர்வம் தென் தமிழ் நாட்டில் வழங்கிவந்த ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களே சொற்ப சந்தேகத்துடன் பல இடங்களுக்கும் போயினவென்று நாம் நினைக்க ஏதுவிருக்கிறது.

பல்லாயிர வருடங்களாக சுரஞானத்தை மாத்திரம் கொண்டு வழங்கிவந்த பன்னிரு சுரங்கள் அங்கங்கே சொற்ப கூடுதல் குறைதலாக வழங்கப்பட்டு வந்தனவென்று தோன்றுகிறது. அதன்பின் சுமார் 2,500 வருடங்களுக்கு முன்னிருந்த பைதாகோரஸ் என்பவரால் ஒருதந்தியில் ச-ப (2/3) என்றும் ச-ம (3/4) என்றும் அளந்து சொல்லும் ஒரு முறை புதிதாய் உண்டாயிற்று. ச-ப, ச-ம என்ற இருசுரங்களும் சற்றேறக்குறையஇந்த அளவில் கிடைக்கிறதாயிருந்தாலும் ஒன்றோடொன்றைப் பெருக்கிச் சொல்லும்பொழுது பல சுரங்கள் அனுபவத்திலிருக்கும் சுரங்களுக்குப் பேதமாய்க்காணப்பட்டன.

இதோடு சாரங்கர் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளிருக்கின்றனவென்று சொன்னமுறையும் பல சந்தேகங்களை உண்டாக்கிற்று. இச்சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமானதினால் அவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்லியிருக்கிறோம்.

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளையும் நுட்பமான சுருதிகளையும் அறியுமுன் ஆயப்பாலையில் வழங்கிவரும் பன்னிரண்டு சுரங்களின் கணக்கு முறையைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

மந்தர ஸ்தாயியில் முடிந்த சட்சம் (ஆதார சட்சம்) ஒன்றானால் மத்திய ஸ்தாயியின் முடிந்த சட்சம் இரண்டாகவும் அதன் பின் தார ஸ்தாயி முடிந்த சட்சம் நாலாகவும் வருமென்று சொன்ன பூர்வ இசைத் தமிழின் கணக்கும் அதன் பின் சாரங்கரின் ஸ்தாயி கணக்கும் ஒத்திருக்கிறதென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். இப்படி ஸ்தாயிகளில் 1, 2, 4 ஆக ஒத்திருக்கும் குரல் அல்லது சட்சம் படிப் படியாய் ஒன்றுக்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதம் உண்டாகாமல் எப்படி பன்னிரண்டு சுரங்களாகின்றனவென்பதைப் பார்க்கவேண்டும்.

மந்த உச்ச சமமென்றும் மூன்று ஸ்தாயிகளிலும் குரலை முடிந்த சுரமாக அல்லது நின்ற சுரமாக நாம் வைத்துக்கொள்ளும்பொழுது அதன்பின் வரும் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், குரல் என்னும் ஏழு சுரங்களும் பன்னிரு இராசியில் பன்னிரு சுரங்களாக வருவதாக நாம் இதன்முன் பார்த்திருக்கிறோம். இதில் ஆரம்ப சுரத்தை இடபமாகவும் முடிந்த சுரத்தைக் குரலாகவும் கணக்கிடவேண்டும்.

இப்படிக் கணக்கிடும்பொழுது மந்தரஸ்தாயியின் கீழுள்ள சட்சம் அரையானால் மந்தர ஸ்தாயியின் முடிந்த சட்சம் ஒன்றாகிறது. மந்தர ஸ்தாயியின் முடிந்த சட்சம் ஒன்றானால் மத்திய ஸ்தாயியின் முடிந்த சட்சம் இரண்டாகிறது. மத்திய ஸ்தாயியின் முடிந்த சட்சம் இரண்டானால் தார ஸ்தாயியின் முடிந்த சட்சம் நாலாகிறது.

இவை மூன்று ஸ்தாயிகளிலும் சுரங்களின் இயக்க முறை ஒரே கணித முறையையுடையதாயிருக்கவேண்டும். எப்படி யென்றால் ஆதார சட்சம் ஒன்றிலிருந்து படிப்படியாய் ஒன்றுக்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதமுண்டாகாமல் பன்னிரண்டு சமமான ஓசையுடைய சுரங்களும் உண்டாகவேண்டும். முடிந்தசுரமாகிய இரண்டு என்ற இலக்கத்தையுடைய