பக்கம் எண் :

854
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

குறிப்பதற்காக இந்த முறை சொல்லுகிறார். அதாவது ஒருஸ்தாயியைப் பன்னிரண்டு சுரங்களாகப்பிரித்து அதில்வரும் ஒவ்வொரு சுரத்தையும் நூறு, நூறாகப்பிரிக்க 12 சுரங்களுக்கும் 1200 பாகங்களாகின்றன. இதைக் கொண்டு சுருதிஸ்தானங்களை இத்தனையாவது சென்ட்ஸில் வருகிறதென்று நிதானிப்பது சுலபமாயிருக்கும். இதனால் மிகவும் நுட்பமான வித்தியாசங்களைக் கண்டுகொள்ளலாம். கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளை அறியவிரும்பும் நமக்கு மிக உதவியாயிருக்குமாதலால் இக்கணித முறையையும் இங்கே காட்டவேண்டியது அவசியமாயிற்று.

சுருதிகள் ஒன்றற்கொன்றிலுள்ள ஒற்றுமை.

மேற்காட்டிய சுருதிக் கணக்கில் இருபத்துநான்கு சுருதிகளும் இன்னின்ன கணக்கோடு வருகின்றனவென்று நாம் பார்த்தோம். அதுபோலவே இவைகளின் ஒற்றுமையையும் நாம் ஒருவாறு பார்க்கவேண்டும்.

இணை, கிளை, நட்பு, இரண்டாம் நரம்பு என்று பொருந்தி நிற்கும் சுரங்களின் கணக்கைப் பூர்வ தமிழ் மக்கள் நன்கறிந்து கூடமாகிய மூன்றாம் ஆறாம் நரம்புகளை நீக்கிக் கானஞ்செய்திருக்கிறார்களென்று இதன் முன் நாம் பார்த்திருக்கிறோம். இவைகளில் இணை இணையாகப் பதினாலாவது சுருதியும் அதன் மேல் அதற்குப் பதினாலாகவும் இணையாகவும் வரும் நாலாவது வரியிலுள்ள ரி4 உம் அதற்கு இணையாய்ப் பதினாலாவது சுருதியாய்ப் பதினெட்டாவது வரியில் வரும் த4 உம் Etc இப்படியே ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரண்டு சுரங்களும் இணை இணையாய் ஏழாவது ஏழாவது இராசியில் வரும் சுரமாய்ப் பதினான்கு சுருதியாய்ப் பொருந்தியிருக்கக் காண்போம்.

அதுபோலவே கிளை கிளையாய் ஐந்தாவது ஐந்தாவது இராசியாய் அல்லது சுரமாய் பத்தாவது பத்தாவது சுருதியாய் ச-ம வருகிறது. அதன் மேல் பத்திற்கு மேல் பத்தாயுள்ள இருபதாம் வரியில் நி2 உம் அதற்கு மேல் பத்தாக ஆறாவது வரியில் க2 உம் அதற்குமேல் பத்தான பதினாறாம் வரியில் த2 உம் அதற்கு மேல் பத்தான இரண்டாம் வரியில் ரி2 உம் அதற்கு மேல் பத்தாவதான பன்னிரண்டாம் வரியில் ம4 உம் இதுபோல் ஒரு ஸ்தாயியிலுள்ள மற்றும் பன்னிரண்டு சுரங்களும் பத்தாவது பத்தாவதாகப் பொருந்தி நிற்கின்றன.

இப்படியே நாலாவது இராசியில் நிற்கும் நட்புச் சுரமானது எட்டுச் சுருதிகளுடையதாய் ச-க, ச-க வாக மேல் பொருந்தி நிற்பதைக் காண்போம். எட்டாவது வரியிலுள்ள க4 பதினாறாவது வரியிலுள்ள த இரண்டோடும் அதன் மேல் எட்டாவதான ச இரண்டோடும் எட்டு எட்டாய்ப் பொருந்தி நிற்கக் காண்போம்.

இதுபோலவே ஒற்றைப்பட்ட இராசிகளில் முதலாவது வரியிலுள்ள ரி அதற்குப் பதிநான்காவது வரியிலுள்ள த ஒன்றோடும், மூன்றாவது வரிசையிலுள்ள ரி3 அதற்கு மேல் பதினாலாவதாயுள்ள த மூன்றோடு ச-ப முறையாய் ஒத்து நிற்கும். இதுபோலவே மற்றவையும் வரும்.

ச-ம பத்தாவது சுருதியாயிருப்பதுபோல் ரி ஒன்றிற்குப் பத்தாவதான ம மூன்றும், ரி மூன்றுக்குப் பத்தாவதான ப ஒன்றும், க ஒன்றிற்குப் பத்தாவதான த ஒன்றும், ம ஒன்றிற்குப் பத்தாவதான நி ஒன்றும், etc முறையே பொருந்தி நிற்கும். இன்னும் ஒன்றிற்கு நாலு எப்படியோ அப்படியே நாலிற்கு ஏழும், ஏழுக்குப்பத்தும், பத்துக்குப் பதின்மூன்றும் etc போலவும் ஒன்றுக்கு