ஆறு எப்படியோ, அப்படியே ஆறுக்குப் பதினொன்றும், பதினொன்றுக்குப் பதினாறும் etc போலவும் வரும். இன்னும் நாம் எந்த இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுகிறோமோ அதற்குத் தகுந்த விதமாய் வரும் சுரங்களும் ஒன்றோடொன்று பொருந்தி நிற்கும். இம்முறையினால் ஒருஸ்தாயியில் இருபத்துநான்கு சுருதிகள் இடைவெளிகளில் வேறு நாதமுண்டாகாமல் படிப்படியாய் உயர்ந்து ஒன்றற் கொன்று தீவிரமாய் ஒரு ஸ்தாயியில் இருபத்து நான்காய் முடிகிறதென்றும் இவையே பூர்வ தமிழ் மக்கள் கானத்தில் உபயோகிக்கப்பட்டு வந்திருந்தவை யென்றும் தற்காலத்திலும் வழங்கி வருகின்றவையென்றும் இனிமேலும் வழங்கி வர வேண்டியவை யென்றும் தெளிவாகக் காண்கிறோம். மேலும் அட்டவணையின் நாலாவது கலத்தில் ரி ஒன்றிற்குரிய துருவலக்கத்தை இரண்டால் பெருக்க ரி இரண்டின் துருவமும் மூன்றால் பெருக்க ரி மூன்றின் துருவமும் நாலால் பெருக்க ரி நாலின் துருவமும் இதுபோல் மற்ற இருபது சுருதிஸ்தானங்களுக்குரிய சுருதிஸ்தானங்களும் கிடைக்கின்றன. ஐந்தாவது கலத்தில் ரி ஒன்றின் மூலதுருவத்திற்கு வரும் எண்ணாகிய 1.0293-ஐ தன்னில்தானே பெருக்க ரி இரண்டிற்கு வரும் எண்ணும் ரி இரண்டிற்கு வரும் எண்ணை ரி ஒன்றிற்குரிய எண்ணால் மறுபடி பெருக்க ரி மூன்றிற்குரிய எண்ணும் மூன்றிற்குரிய எண்ணை ரி ஒன்றிற்குரிய எண்ணினால் பெருக்க ரி நாலுக்குரிய எண்ணும் முறையே மற்ற இருபத்து நான்கு சுருதிகளுக்குரிய எண்களும் கிடைக்கின்றன. ஐந்தாவது கலத்தில் சுருதிக்குரிய பின்ன எண்கள் படிப்படியாய் உயர்ந்து இரண்டில் முடிவதையும் எட்டாவது கலத்திலுள்ள தந்தியின்பாகம் படிப்படியாய்க் குறைந்து அரையில் (1/2) வந்து முடிவதையும் காண்போம். ரி ஒன்றிற்குரிய வரியில் ஐந்தாவது கலத்தில் வரும் எண்ணையும் எட்டாவது கலத்தில் வரும் எண்ணையும் ஒன்றாக பெருக்கினால் ஒன்றுவரும். அது போலவே ரி இரண்டிற்குரிய வரியில் ஐந்தாவது கலத்தின் இரண்டாவது எண்ணையும் ஒன்றாக பெருக்கினால் ஒன்று வரும். இதுபோலவே மற்றும் சுருதிஎண்கள் யாவும் பெருக்கப்பட ஒன்றொன்றாகவரும். இருபத்துநான்காவது வரியில் ஐந்தாவது கலத்தில் வரும் இரண்டையும் எட்டாவது கலத்தில் வரும் அரையையும் (.5) ஒன்றாகப் பெருக்க ஒன்று வருகிறது. இதுதவிர எட்டாவதுகலத்தில் வரும் முதலாவது இலக்கத்தையும் இருபத்து மூன்றாவதுலக்கத்தையும் பெருக்க அரையாக (1/2) வரும். இரண்டாவது வரியின் இலக்கத்தையும் இருபத்திரண்டாவது வரியின் இலக்கத்தையும் ஒன்றால் பெருக்க (1/2) வரும். இதுபோலவே மூன்று இருபத்தொன்று, நாலு இருபது, ஐந்து பத்தொன்பது, ஆறு பதினெட்டு, ஏழு பதினேழு, எட்டு பதினாறு, ஒன்பது பதினைந்து, பத்து பதினாலு, பதினொன்று பதின்மூன்று என்றவரிகளின் எண்களை ஒன்றோடொன்று பெருக்க அரை (1/2) வரும். இதுபோலவே தனியாய்நின்ற பன்னிரண்டாமிடத்திலுள்ள இலக்கத்தை தன்னில்தானே பெருக்க அரையாக (1/2) வரும். இம்முறைப் படியே ஒவ்வொரு சுரமும் சுருதிகளும் ஒத்திருக்குமானால் மாத்திரம் கிரகமாற்றுவதற்கும் கிரகசுரம் பாடுவதற்கும் அனுகூலமாயிருக்கும். இம்முறைதவறினால் சங்கீதத்திற்குரிய சிறந்த லக்ஷணங்களன்றி ஒரு சுரத்திற்கொருசுரம் பேதப்பட்டு ஒரு ஸ்தாயியில் ஒற்றுமையில்லாத அளவுகள் உண்டாகி இதன்முன் கொடுக்கப்பட்டிருக்கும் பல சந்தேகமான அட்டவணைகள்போல் எண்ணிறந்த அட்டவணைகள் உண்டாக ஏதுவாகும்.
|