தாலும் இதன்முன் சொல்லியிருக்கும் கருத்து இதைப் பார்க்கிலும் உத்தமமாயிருக்குமென்று நினைக்கிறேன். என்றாலும் சரியானபடி அதற்கும் பூர்வ நூல்களில் ஆதாரங்கிடைக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். (1) ஆயப்பாலை முறையில் பெரும்பாலை ஏழும் சிறுபாலை ஐந்துமாக பன்னிரண்டு பாலை பிறக்குமென்றும் அதில் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை முதலிய சங்கராபரணம், கரகரப்பிரியா, அனுமத்தோடி, கலியாணி, அரிகாம்போதி, நடபைரவி என்று தற்காலங்களில் வழங்கும் ஆறுதாய் இராகங்களையும் அவைகளுள் பண், பண்ணியம், திறம், திறத்திறம் (சம்பூரணம், சாடவம், ஒளடவம், சுவராந்தம்) என்ற நால்வகையான கிளை (ஜன்னிய) இராகங்களையும் சொன்னார்கள். (2) வட்டப் பாலையில் பிறக்கும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் 4 பெரும் பண்களையும் ஒவ்வொரு பெரும் பண்ணிலும் பிறக்கும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நாலு ஜாதிகளையும் அவை ஒவ்வொன்றிலும் விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடும் முறையையும் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறார்கள். இதன்மேல் வழங்கி வரும் நுட்பமான சுருதிகளுக்கு அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை யென்று திரிகோணப் பாலை சதுரப்பாலைகளுக்கு இளங்கோவடிகள் ஒருவேளை விட்டிருக்கலாமென்று நினைக்கக் கூடியதாகவுமிருக்கிறது. ஒரு ஸ்தாயியில் முன்னும் பின்னுமாக முடிவடைகிற (2/3),(3/4) என்ற அளவுகளின்படி ஒரு காலத்திலாவது நம்முடைய சந்தேகம் தீரப்போகிறதில்லை. ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வைத்துக்கொண்டு ஒரு நாளும் நாம் கானம் செய்ய முடியாது. ஒருஸ்தாயியில் 22 சுருதிகள் உண்டென்று வைத்துக்கொண்டால் நம் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளை அதில் குறித்துக்கொள்ள முடியாது. ஒரு ஸ்தாயியியைப் பன்னிரண்டு பாகங்களாகப் பிரித்து அதில் வரும் ஏழு சுரங்களோடு (1/96) என்ற நுட்பமான ஒன்று அல்லது சில சுருதிகள் சேர்ந்து வருகின்றனவென்று தெரிந்துகொள்வதே தகுதியாயிருக்குமென்று எண்ணுகிறேன். ஆகையினால் அதற்கு கணிதமுறை சொல்லி இன்னின்ன இராகங்களில் வருகிறதென்று காட்டவும் வேண்டும். இதற்கு முன் 12 சுரங்களுக்கும், 24 சுருதிகளுக்கும் எப்படி கணக்கு முறை கண்டு பிடித்தோமோ அம்முறையே இதற்கும் வருவதினால் அதிகம் சொல்லவேண்டுமென்று தோன்றவில்லை. "மூலாதாரந் தொடங்கிய மூச்சைக் காலாற்கிளப்பிக் கருத்தாலியக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர் மைகளைப் பிறப்பிக்கப்பட்ட மிடற்றுப் பாடலும்" என்ற பூர்வ முறைப்படி ஒன்றாயிருந்த ஆதாரசட்சம் இரண்டாகிய மத்தியஸ்தாயி சட்சம் வரை 96 பாகங்களாகப்பிரிந்து 96 நுட்ப சுருதிகளாகப் படிப்படிாயய் ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதமுண்டாகாதபடி எப்படி ஒத்து நிற்கிறதென்று பார்க்கவேண்டும். முன் நாம் பார்த்தபடியே இரண்டின் மூல எண்ணைத் தொண்ணூற்றாறால் வகுத்து வந்த மூலஎண்ணை 1, 2, 3, 4, 5 முதலிய 96 எண்களினாற் பெருக்க அட்டவணையில் நாலாங் கலத்திலுள்ள மூல எண்கள் கிடைக்கின்றன. மூல எண்களுக்குரிய தசாம்ச எண்களை ஐந்தாம் கலத்திலும் ஓசையின் அலைகளை ஆறாம் ஏழாம் கலங்களிலும் தந்தியின் பாகத்தை எட்டாம் கலத்திலும் தந்தியின் அளவை ஒன்பதாம் கலத்திலும் சுரங்கள் ஒவ்வொன்றின் அளவைப்பத்தாம் கலத்திலும் ஒவ்வொரு சுருதிக்கும் வரும் சென்ட்ஸ்களைப் பதினோராம் பன்னிரண்டாம் கலத்திலும் காண்போம். அடியில் வரும் அட்டவணையில் தெளிவாகக் காட்டப் பட்டிருக்கிறது.
|