1. பன்னிரு இராசிச் சக்கரத்தில் குறித்து வழங்கி வந்த வட்டப்பாலையில் இணை கிளையாக அல்லது ச-ப, ச-ம வாகக் கிடைக்கும் பன்னிரு சுரங்களும் ஆயப்பாலையில் வழங்கும் பன்னிரு சுரங்களென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். இவை ஏழு சுரங்களில் குரல் இளி (ச-ப) என்ற இரண்டு சுரங்கள் தவிர மற்ற ரி க ம த நி என்ற ஐந்து சுரங்களும் இரண்டு இரண்டாய்ப் பன்னிரண்டாயிற்றென்று இதன் முன் சொல்லியிருக்கிறோம். 2. வட்டப்பாலையில் வரும் அரை அரையான பன்னிரு சுரங்களும் இரண்டு இரண்டு அலகுடையதாய் மொத்தத்தில் 24 சுருதிகளாக அல்லது அலகுகளாக, வட்டப்பாலையில் வழங்கி வருகின்றன. 3. வட்டப்பாலையில் வழங்கிவந்த 24 அலகுகளுள் ஒவ்வொரு அலகும் இரண்டு இரண்டாய்ப் பிரிந்து அரைஅரையான அலகுடன் தென்னிந்திய கானத்தில் வழங்கி வருகிற தென்று அனுபோகத்தால் காண்கிறோம். 4. அரை அரையாய் வழங்கிவந்த 48 சுருதிஸ்தானங்களும் கால் காலாய்ப் பிரிந்து தொண்ணூற்றாறான சுருதிகளாய் நம் கர்நாடக சங்கீதத்தில் மிகுந்து வழங்கி வருகின்றன. ஏழு சுரங்கள் பாதி பாதியாய்ப் பிரிக்கப்பட்டுப் பன்னிரண்டு சுரங்களானது ஆயப்பாலை என்றும், ஆயப்பாலையின் பன்னிரண்டு சுரங்கள் இரண்டு இரண்டாய்ப் பிரிந்து 24 அலகுகளானது வட்டப்பாலை என்றும், வட்டப்பாலையிலுள்ள 24 அலகுகளும் இரண்டு இரண்டாகப் பிரிந்து 48 அரை அலகுகளாய் வருவது திரிகோணப்பாலை என்றும், 48 அலகான திரிகோணப் பாலையின் அரை அலகுகள் இரண்டு இரண்டாய்ப் பிரிந்து 96 கால் சுருதியாய் வழங்கி வந்தவை சதுரப்பாலை என்றும் நாம் நினைக்க ஏது விருக்கிறது. ஏனென்றால் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்ற நாலு பாலைகளிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆயப்பாலையில் எப்படி அரை அரை சுரங்களாய் வழங்கி வந்தார்களோ அது போலவே வட்டப்பாலையில் கால் கால் சுரமாக வழங்கி வந்திருகிறார்களென்று அவர்கள் கணக்கினாலேயே தெரிகிறோம். அதுபோலவே மூன்றாம் தடவையாகப் பாதி பாதியாகப் பிரித்தவைகளைத் திரிகோணப்பாலை என்றும் நாலாம் தடவையாகப் பாதி பாதியாய்ப் பிரித்தவைகளைச் சதுரப்பாலையென்றும் பெயர் வைத்து வழங்கி வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. பன்னிரண்டான அரைச் (1/2) சுரங்களை ஆயப்பாலை என்றும், இருபத்துநாலான கால் (1/4) சுரங்களை வட்டப்பாலை என்றும், நாற்பத்தெட்டான அரைக்கால் (1/8) சுரங்களை திரிகோணப்பாலை யென்றும், தொண்ணூற்றாறான வீவசம் (1/16) சுரங்களை சதுரப்பாலை என்றும் சொல்லியிருப்பார்களென்று நாம் நினைக்க ஏது விருக்கிறது. மேற்காட்டிய நாலு விதமான சுருதிமுறைகளிலும் தென்னிந்தியாவின் இராகங்களும் பண்களும் நாளதுவரையும் பாடப்பட்டுவருகின்றன வென்பதைக் காட்டும் அட்டவணையை இதன்பின் பார்ப்போம். விளங் கைக்கிளையில் இரண்டு அலகு குறைத்துப் பாடுவது வட்டப்பாலையென்றும் மூன்று சுரங்களைக் குறைத்துப் பாடுவது திரிகோணப்பாலை என்றும் நாலு சுரங்களைக் குறைத்துப்பாடுவது சதுரப்பாலை என்றும் 758-ம் பக்கத்தில் உத்தேசமாகச் சொல்லியிருந
|