பக்கம் எண் :

866
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

மேலும் அட்டவணையில் ஒவ்வொரு சுருதிக்கும் வரும் நுட்பமானநாலு சுருதிகள் தனித்தனியாகப் பிரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு இராசியும் இரண்டிரண்டு அலகாகவும் ஒவ்வொரு அலகும் நவ்வாலு சுருதிகளாகவும் வகுக்கப்பட்டிருக்கிறது.

இவைகளில் ஏதாவது ஒன்று சொல்லப்பட வேண்டுமானால் தனக்குக்கீழ் பன்னிரண்டு மெட்டுகளில் ஒன்றிலிருந்து இழுத்துக் கமகமாய்ச் சொல்லுவது தற்கால வழக்கத்திலிருக்கிறது. அப்படி வீணையில் இழுத்து வாசிப்பதையும் நமது சாரீரத்தில் சொல்லப்படுவதையும் நுட்பமாக நிச்சயம் பண்ணிக் கொண்டு அதன் மேல் சிறுமெட்டுகள் வைத்துப் பரிட்சித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது ஒரு சுருதியின் (1/4),(1/2),(3/4) ஆன நுட்பமான இடங்கள் கிடைக்கும். இதோடு இவ் வட்டவணையில் 8, 16, 24, 32, 40 போன்ற பன்னிரண்டு ஸ்தானங்களும் (1/2),(1/2) ஆன ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களாம். 4, 8, 12, 16, 20, 24 போன்ற 24 ஸ்தானங்களும் வட்டப்பாலையில் வழங்கிவரும் 24 சுருதிகளாம் மற்றவை ஒவ்வொரு சுருதியின் (1/4),(1/2),(3/4) ஆகச் சேர்ந்து வரும் நுட்பமான சுருதிகளாம்.

இவைகள் பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த வட்டப்பாலையில் பன்னிரண்டு இராசிகளில் வருகிறதையும் காட்டுகின்றன. ஒரு இராசிக்கு இரண்டு அலகாக வகுத்து 24 சுருதிகளாக வழங்கிவந்த முறைப்படியும் ஒரு அலகு நாலு நாலாகப் பிரிந்து நுட்பமான சுருதிகளான விதத்தையும் தெளிவாய் அறிந்துகொள்ளும்படி பிரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதில் ஒவ்வொரு சுரமும் இணை இணையாய்க் கிளை கிளையாய்ப் பொருந்தும் என்பதை இதன்முன் பார்த்திருக்கிறோம். அதுபோலவே இணை இணையாய்க் கிளை கிளையாய்ப் பொருந்தும் சுரங்களில் கமகமாய் வரும் ஒரு அலகும் அதன் உட்பிரிவாகிய நாலு நுட்ப சுருதிகளும் ஒத்து வரும்.

 எப்படியென்றால் 16-ம் வரியில் கடகத்தில் முடிந்த நாலு அலகுள்ள ரிஷபம் கும்பத்தில் முடிந்த தைவதத்தோடு ச-ப முறையாய்ப் பொருந்தி நிற்கும். இதுபோலவே கடகத்திலிலுள்ள ரிஷபம் தனக்குமேல் 18-ம் இடத்திலுள்ள (1/2) சுருதியைச் சேர்த்துக்கொண்டு கமகமாய் வழங்கும்பொழுது கும்பத்திலுள்ள தைவதம் 74-வது வரியிலுள்ள (1/2) சுருதியைச் சேர்த்துக்கொண்டு கமகமாய் வழங்கும். இவை சங்கராபரணத்தில் வழங்கிவரும் ரிஷப தைவதங்களாம். இவைகள் 4 (1/2) அலகு ரிஷபமென்றும் 4 (1/2) அலகு தைவதமென்றும் சொல்லப்படவேண்டும்.

அதுபோலவே தீரசங்கராபரணத்தில் ஜன்னியமான ஆரபியில் 17-வது வரியில் வரும் 4 (1/2) அலகு ரிஷபமும் 73-வது வரியில் வரும் 4 (1/4) அலகு தைவதமும் வருகின்றன. இது போலவே நுட்பமாகவழங்கி வரும் சுருதிகளை இதன்பின் வரும் அட்டவணைகளில் காண்போம்.

இவைகள் இணை இணையாய் அல்லது கிளைகிளையாய்ப் பொருந்தும் சுரங்கள் பன்னிரண்டு இராசியில் சொல்லப்படும்பொழுது (1/4),(1/2),(3/4),1,1(1/4),1(1/2),1(3/4) என்று கமகமமாகச் சேர்ந்து அந்தந்த இராசியில் நிற்கும் சுரத்தின் பெயரையே பெறும். அதாவது கடகத்தில் 4 அலகோடு