பக்கம் எண் :

867
சுரம் சுருதிகளின் பெயர்கள்.

முடிந்த ரிஷபம் சிம்மத்தில் வரும் எட்டு இடங்களில் இருபத்து நாலாவதைத் தவிர 17, 18, 19, 20, 21, 22, 23 என்ற ஏழு இடங்களில் 4(1/4),4(1/2),4(3/4),5,5(1/4),5(1/2),5(3/4) அலகுகள் என்று கமகமாய் வழங்கிவருகிறது.

மிதுனத்தில் எட்டாம் இலக்கத்தில் முடிந்த இரண்டு அலகுள்ள ரிஷபம் தனக்கு மேல் கடகத்தில் 16-ம் இடத்தில் 4 அலகோடு முடியும் ரிஷபத்தை நீங்கலாக 9, 10, 11, 12, 13, 14, 15 என்ற எண்களுக்கு 2(1/4),2(1/2),2(3/4),3,3(1/4),3(1/2),3(3/4) அலகுள்ள சுருதிகளாக வழங்கும். இவைகளை இதன் பின் வரும் அட்டவணைகளில் காண்போம்.

இவைகளில் ஆயப்பாலை முறைப்படி (1/2) அரை அரையான பன்னிரண்டு சுரங்களின் கணக்கும் (1/4) கால் காலான வட்டப்பாலையின் இருபத்துநான்கு சுருதிகளின் கணக்கும். (1/8) அரைக்கால் அரைக்காலான திரிகோணப்பாலையின் நாற்பத்தெட்டு சுருதிகளின் கணக்கும் (1/16) வீசம் வீசமானசதுரப் பாலையின் 96 சுருதிகளின் கணக்கும் கண்டுகொள்ளப்போது மானதாயிருக்கிறதென்று எண்ணுகிறேன். இதோடு சுரங்களின் பெயர்களில் பல சந்தேகம் வரும்படியாக நாம் காணுகிறதா யிருந்தாலும் கர்நாடகசங்கீதத்தின் சுருதிகளை இசைத்தமிழ் நூல்கள் மூலமாகவும் தெலுங்கு நூல்கள் மூலமாகவும் காணக்கூடிய தெளிவுடையதாகத் தெரிகிறது. ஆகையினால் பூர்வ தமிழ்நூலை அனுசரித்தே தற்காலமும் பெயர்களிருக்க வேண்டுமென்றும் அதை அனுசரித்த சமஸ்கிருத பெயர்களும் உபயோகிக்கலா மென்றும் தோன்றுகிறது.

6. சுரம் சுருதிகளின் பெயர்கள்.

இப்போது நாம் சுத்தரிஷபம் என்றும் சதுர்சுருதி ரிஷபமென்றும் சுத்ததைவதமென்றும் சதுர்சுருதிதைவத மென்றும் சொல்லும் சுரங்கள் ஆயப்பாலையின் இரண்டு, நாலான அலகுகளுடன் வருகின்றனவேயன்றி வேறல்ல. பூர்வ தமிழ் மக்கள் அலகுகள் என்று சொன்னதையே மற்றவர் சுருதிகள் என்று சொல்லுகிறார்கள். இரண்டு சுருதிகள் வழங்கும் ரி, க, ம, த, நி என்னும் சுரங்களைச் சுத்தம் என்ற பெயரோடு சுத்தரிஷபம், சுத்த காந்தாரம், சுத்த மத்திமம், சுத்த தைவதம், சுத்த நிஷாத மென்று தற்காலம் நாம் வழங்குகிறோம். அதுபோலவே நாலு அலகுகளாக வரும் ரி, க, ம, த, நி, என்ற சுரங்கள் சதுர் சுருதி ரிஷபமென்றும், சதுர் சுருதி தைவதமென்றும் சாதாரண காந்தாரமென்றும் பிரதிமத்திமமென்றும் கைசிக நிஷாதமென்றும் தற்காலத்தில் வழங்கிவருகின்றன.

அடியில் வரும் அட்டவணையில் கண்ட சுரங்களுக்கும் பன்னிரண்டு இராசியில் குறித்த அலகுகளுக்கேற்ற விதமாய்ப் பெயர்சொல்லப் படுகிறதாகக் காண்கிறோம்.