பக்கம் எண் :

868
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களின் பூர்வாலப் பெயர்களும் தற்காலம் வழங்கிவரும் பெயர்களும்.

நம்பர்பூர்வவகாலப் பெயர்களதற்காலப் பெயர்கள்.
1சகுரல்            இடபம்சசட்சமம்
2ரி2ஈரலகு துத்தம்   மிதுனம்ரி2சுத்த ரிஷபம்
3ரி4நாலு அலகு துத்தம்    கடகம்ரி4சதுர்சுருதி ரிஷபம்
4க2ஈரலகு கைக்கிளைசிம்மம்க2சுத்த காந்தாரம்
5க4நாலலகு கைக்கிளைகன்னிக4சாதாரண காந்தாரம்
6ம2ஈரலகு உழை    துலாம்ம2சுத்த மத்திமம்
7ம4நாலலகு உழை   விருச்சிகம்ம4பிரதி மத்திமம்
8பஇளி          தனுசுபபஞ்சமம்
9த2ஈரலகு விளரி    மகரம்த2சுத்த தைவதம்
10த4நாலலகு விளரி   கும்பம்த4சதுர் சுருதிதைவதம்
11நி2ஈரலகு தாரம்    மீனம்நி2சுத்த நிஷாதம்.
12நி4நாலலகு தாரம்   மேஷம்நி4கைசிக நிஷாதம்
13சகுரல்  இடபம்சசட்சமம்

ஆனால் ரிஷபவீட்டில் காந்தாரமு காந்தார வீட்டில் ரிஷபமும் நிஷாத வீட்டில் தைவதமும் தைவத வீட்டில் நிஷாதமும் கலந்து வருகிறதாக நம் அனுபோகத்திலிருக்கிறது. இதுவும் இராசி வட்டத்தில் நிற்கும் பன்னிரண்டு சுரங்களில் ஒவ்வொரு வீடு சட்சம் தள்ளிக் கொண்டுபோக உண்டாகும் பன்னிரு பாலைகளில் காணப்படுகிறது. அவைகளில் வரும் நாலாவது சிறுபாலையில் நாலலகுரிஷபத்தின் வீட்டில் காந்தாரமும்நாலலகு தைவதத்தின் வீட்டில் நிஷாதமும் வருகிறதாக 720-ம் பக்கம் கிரகமாற்றும் அட்டவணையில் நாலாவது வரியில் காண்போம். அப்படியே ஒன்பதாவவது வரியில் நாலலகு தைவதத்தின்வீட்டில் நிஷாதமும் பதினோராவது வரியில் நாலு அலகு ரிஷபத்தின் வீட்டில் காந்தாரமும் நாலு அலகு தைவதத்தின் வீட்டில் நிஷாதமும் வலுகிறது. அதாவது நிஷாதம் தனக்குரிய இரண்டு இராசிகளை விட்டு விட்டு ரிஷபத்தின் ஒரு வீடுவரை இறங்கி வருகிறது. இதனால் காந்தார நிஷாதங்கள் மூன்று இராசியில் வருகிறதாகவும் ஆறு அலகுகள் பெறுகிறதாகவும் காண்கிறோம். அப்படியே ரிஷபம் தன் இரண்டாவது வீட்டை விட்டு மூன்றாவதான காந்தார வீட்டைச்சேரும் பொழுது மூன்று இராசிகளிலும் ஆறு அலகோடு நிற்கிறது. இந்த ஆறு அலகில்வரும் ரிஷப தைவவதங்களை சட்சுருதி என்று சொல்லுகிறோம். அதே அர்த்தமாக அதாவது ஆறு சுருதிகள் பெற்ற காந்தாரத்தை அந்தர காந்தாரம் அல்லது முடிந்த காந்தாரமென்றும் நிஷாதத்தை காகலி அதாவது இனிமையுள்ள நிஷாதமென்றும் தற்காலம் வழங்குகிறோம். இவ்விபரங்கள் யாவும் அடியில் வரும் அட்டவணையில் காண்க.