பக்கம் எண் :

869
சுரம் சுருதிகளின் பெயர்கள்.

இவைகள் பல இராகங்கள் உண்டாவதற்குப் பன்னிரண்டு சுரங்களை இடையில்லாமல் உபயோகிப்பதற்காக வழங்கி வருகின்றன. ரிஷப காந்தாரத்தில் இரண்டு பேதமும் தைவத நிஷாதத்தில் இரண்டு பேதமும் ஆக நாலு பேர்களை அடைந்து பதினாறு சுரங்களாக வழங்கி வருகின்றனவேயொழிய பதினாறு சுரங்களல்ல. ஸ்தாயியில் வழங்கிவரும் சுரங்கள் பன்னிரண்டே.

அடியில்வரும் அட்டவவணையிற் கண்ட சுரங்களின்படி தற்காலத்தில் நாம் கானஞ்செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் இம்முறைப்படியே முற்காலத்தில் கானஞ்செய்துகொண்டிருந்தார்களென்பதையும், பரம்பரையாய் வழங்கிவரும் இராகங்களினாலும் பண்களினாலும் தெளிவாகக் காண்கிறோம். பூர்வ பண்களின் நுட்பமான சில சுருதிகள் இப்பன்னிரண்டு சுரங்களோடு சேர்ந்து வருவதைக் குறிக்காமல் சில கமகங்களோடு பாடப்படவேண்டு மென்றும் அவைகளை குரு மூலமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றும் சொல்லி நூல்கள் எழுதி வைத்தார்கள். ஆகையினால் இந்தப் பன்னிரண்டு சுரங்களிலிருந்து யாழின் தந்தியில் இழுத்து வாசிக்கப்படும் மற்றும் நுட்பமான சுருதிகள் காலக் கிரமத்தில் மறைந்து பன்னிரண்டு சுரங்களிலும் சந்தேகிக்கும் படியாக நேரிட்டது.

ஆயப்பாலையின் பன்னிரு சுரங்கள் பதினாறு சுரங்களாய் வழங்கும் அட்டவணை.

தற்காலத்தில் வழங்கும் சுரங்களும் விக்ருதி சுரங்களின்பெயர்களும்பூர்வப்பெயர்கள்
சட்சமம்சசசட்சமம்     
சுத்த ரிஷபம்ரி2   2அலகு ரி 
சதுர் சுருதி ரிஷபம்ரி4க2சுத்த காந்தாரம4 அலகு ரி or 2 அலகு க
சட் சுருதி ரிஷபம்ரி6க4சாதாரண காந்தாரம்6 அலகு ரி or 4 அலகு க
  க6அந்தர காந்தாரம்6 அலகு க
சுத்தமத்திமம்ம2  2 அலகு ம
பிரதிமத்திமம்   4 அலகு ம
 பபபஞ்சமம்ப அல்லது இளி
சுத்த தைவதம்த2   2 அலகு த
சதுர் சுருதி தைவதம்த4நி2சுத்த நிஷாதம்4 அலகு த or 2 அலகு நி
சட் சுருதி தைவதம்த6நி4கைசிக நிஷாதம்6 அலகு த or 4 அலகு நி
  நிகாகலி நிஷாதம்6 அலகு நி
 சச ச or குரல்