பக்கம் எண் :

10அறமும் அரசியலும்

வந்தனை செய்வோம்" - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை
செய்வோம்" என்று யாராவது தெருவில் பாடிக்கொண்டு சென்றாலும் கேட்டுக்
கிளர்ச்சி பெற்றுத் தலைநிமிர்ந்து நடக்கும் அவ்வளவு மாறுதலை
அவர்களுடைய மூளை வளர்ச்சி உண்டாக்கிவிட்டது. இது தான் மற்றவர்களின்
எண்ணத்தில் விழுந்த இடி.

பலவகை முயற்சி

     அரசியலில் நல்ல மாறுதல் ஏற்பட்டால்தான் மக்கள் வாழ்க்கையில்
அறம் நிலைக்க முடியும் என்று அறிஞர் சிலர் எண்ணுகின்றார்கள்.
அரசியலைப் பற்றிக் கவலை இல்லை. நம் வரையில் அறத்தைக் கடைப்
பிடித்து மனச்சான்றை ஒட்டி வாழ்க்கை நடத்திவிட்டுச் சென்றால் போதும்
என்ற கொள்கை இதுவரையில் இருந்து வந்தது. தனித்தனியாக ஒரு சிலர்
அறநெறியில் வாழ்வதற்கும் வாழ்க்கைப் போராட்டம் தடையாக நிற்பதை
இப்போது மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றார்கள். "ஊர் எப்படியாவது
போகட்டும், நம் வீட்டு வரையில் உணவுப் பொருள் சேர்த்து வைத்து உண்டு
வாழ்வோம்; ஈட்டியும் கத்தியும் செய்வதில் காலம் கழிப்பது பாவம்", என்று
சிலர் எண்ணிவந்த காலம் மலையேறி விட்டது. "உழைப்பில்லாமல் திருடி
வாழ்கின்றவர்களுக்கு ஊரில் இடம் கொடுப்பதே பாவம், அவர்கள் திருடுமாறு
நாம் ஏமாந்து வாழ்வதே அதைவிடப் பெரிய பாவம்", என்று எண்ணும் புதிய
நிலை பிறந்து விட்டது. உலகத்தில் அறத்தை நிலைநாட்டுவதே பெரிய
கடமை, முதல் கடமை என்ற உணர்ச்சி புத்தர் முதலான பழங்காலத்துச்
சான்றோர் எல்லோரிடமும் விளங்கியிருந்தது. ஆனால் அறநெறியையும்