முடியுமா? அவைகள் அறத்தின் எல்லையையும் கடந்து அடாத செயல்களில் இறங்குகின்றன. இந்த நிலையில்தான் வண்டியில் கொலையும் கொள்ளையும் மலியும்; கொடுமை காணப்படும். அரசியல் கொலையியலாக மாறும் பகுதி இதுவே. தம் வாக்குரிமையைப் பெற்று மேலே பதவிகளில் விளங்குகின்றவர்களைத் திருத்த முடியாதபோது, தீர்த்து முடிக்க வேண்டும் என்ற கொடிய துணிவு பிறப்பதை எந்த நாட்டு வரலாற்றிலும் காணலாம். திருத்தும் உரிமை தகுதித் தேர்தலில் இந்தக் கொடுமைக்கே இடம் இல்லை. அமைச்சர்கள் பெரும்பாலோருடைய விருப்பத்திற்கு மாறாக நாட்டை ஆண்டு வருவார்களானால் உடனே பொது மக்கள் அவர்களைக் குறைகூறுவார்கள்; அவர்களைத் தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்தைக் குறை கூறுவார்கள். பாராளுமன்றத்தார் உடனே பொது மக்களின் கருத்தை மதித்து, அமைச்சர் குழுவைக் கலைப்பார்கள். நாட்டில் புதிய அரசியல் முறைக்கு இடம் ஏற்படும். ஆகவே, திருத்த முடியவில்லையே என்று உரிமையற்ற நிலைமையை உணர்ந்து பகையும் ஆத்திரமும் கொள்ள வழியில்லாமல் போகும். பாராளுமன்றத்தார் அவ்வாறு செய்யாமல் காலம் கடத்துவார்களானால், அவர்களைத் தேர்ந்தெடுத்த ஜில்லா மன்றங்களைப் பொதுமக்கள் நெருக்குவார்கள். ஜில்லா மன்றங்கள் தாம் தாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திலிருந்து திரும்பி வரச் |