செய்தால், உடனே மாறுதல் ஏற்படும். திருத்தும் உரிமை, மாற்றும் உரிமை இந்த நிலையிலும் இருப்பதால், பொதுமக்களின் மனம் கெட வழி இல்லை. ஜில்லா மன்றங்களும் ஒன்றும் செய்யாமல் காலம் கடத்தினால், அவற்றிற்கு உறுப்பினர்களை அனுப்பிய தாலுக்கா மன்றங்கள் அவர்களைத் திரும்பிவரச் செய்தால் அவைகள் கலைந்துவிடும். அடிப்படை அசைந்து குலுங்கினால் கட்டடம் நிற்காதது போல், அமைச்சர் குழு மாறி விடும். தாலுக்கா மன்றங்களும் வாளா இருந்தால், ஊர் மன்றங்கள் அந்தக் கடமையைச் செய்தால் அவைகள் அசைந்து கலையும். ஊர்மன்றங்களும் வாளா இருந்தால் அந்த ஊரிலுள்ள இரண்டாயிரம் பேரும் கூட்டம் கூடி மறுதேர்தல் நடத்திவிடலாம். இப்படிப் பெரும்பாலான ஊர்களும் தாலுக்காக்களும் ஜில்லாக்களும் அசைந்தால் ஆட்சி முறையில் மாறுதலை ஏற்படுத்திவிட முடியும். பெரும்பாலான ஊர் மன்றங்கள் மாறாமல், சில தாலுக்கா மன்றங்களும் அசையாமல், அதனால் அமைச்சர் குழு மாறாமல் இருக்கலாம். அப்போதும், பொது மக்களுக்கு ஆத்திரம் ஏற்பட வழி இல்லை. பெரும்பாலோர் விரும்பவில்லையே, நாம் என்ன செய்யலாம், பொறுப்போம் என்ற எண்ணம் ஏற்படும். உலகம் பொல்லாதது என்ற சோர்வு ஏற்படவும் வழி இல்லை. ஏனென்றால் மற்ற ஊர் மன்றங்களை மாற்றி அமைக்க வேண்டுமே, அதற்கு வேண்டிய மனமாற்றம் |