பக்கம் எண் :

12அறமும் அரசியலும்

ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் தம் தம் செல்வாக்கைப் பெருக்குவதே
அரசியல் தொண்டர்களின் முதல் கடமை ஆகின்றது. அதனால்தான் தம்
கொள்கையைப் போற்றும் மக்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும்
என்று முயல்கின்றார்கள். ஆனால் அரசியல் தொண்டர்கள் அறிந்த அளவு
மக்கள் அறிவதில்லை. கால நிலைக்கும் இடத்தின் சூழலுக்கும் ஏற்றபடி
மாறுதல் செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் கருதும்போது, வேண்டாம்
என்று மறுக்கும் நிலையிலேயே மக்கள் இருக்கின்றார்கள். இதை அறிந்த
வேறு சில தொண்டர்கள், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள
முயல்கிறார்கள். இவர்கள் நேர்மை குறைந்தவர்கள்; தந்திரக்காரர்கள்.
ஆகையால் எப்படியாவது செல்வாக்குப் பெறுவதே நோக்கமாகக்
கருதுகின்றார்கள். "நாமும் இப்போது மாறுதல் வேண்டாம்" என்றே சொல்லி
விடலாம்; மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு செல்வாக்கைப்
பெருகச் செய்துகொண்டு ஒரு படி முன்னேறலாம். நம் பக்கம் பெரும்பாலோர்
திரும்பிய பிறகு, படிப்படியாக மாறுதல் செய்து விடலாம்; இதுதான் தக்க வழி",
என்று துணிந்து ஏமாற்றத் தொடங்குகின்றார்கள்.

     இவ்வாறு அரசியல் கட்சிகள் இரண்டு ஏற்படுகின்றன. ஒரு கட்சியார்
உண்மையை ஒளிக்காமல் எடுத்துச் சொல்லி மக்களிடத்தில் செல்வாக்குப்
பெற முயல்கின்றவர்கள். மற்றொரு கட்சியார் உண்மையைக் கூறாமல் மக்கள்
மனப்பான்மையையே எடுத்துச் சொல்லிச் செல்வாக்குப் பெற
முயல்கின்றவர்கள், இரு கட்சியார் நோக்கமும் ஒன்றேதான். ஆனால் கட்சிப்
போக்கு வேறு வேறு. நோக்கத்தின் ஒற்றுமையை இருசாராரும்
மறைக்கின்றார்கள். போக்கின்