பக்கம் எண் :

குறுகிய நோக்கம் 13

வேறுபாட்டையே பெரிதாக்குகின்றார்கள். தம் தம் வேறுபாட்டை
எடுத்துரைப்பதால் வெற்றி பெற முயல்கின்றார்கள். கட்சிப் பிணக்கு,
கட்சிப்பூசல், கட்சிப்போர் எல்லாம் பெருகுகின்றன. கட்சியை வளர்ப்பதே
இன்றைய வேலை. மற்றக் கடமைகள் நாளைக்கே என்ற வெறி அவர்களைப்
பற்றி அலைக்கின்றது. அரசியல் தொண்டு என்று தொடங்கியதை
மறக்கின்றார்கள். அரசியல் செல்வாக்கு என்பதே வேட்டை ஆகின்றது.
அரசியல் தொண்டர்கள் என்னும் அன்பு நிலை மாறி, அரசியல் தலைவர்கள்
என்ற ஆசைநிலை எழுகின்றது. உட்பகையும் ஆரவாரமும் தாமாகவே
வளர்கின்றன. இரண்டு கட்சியார்க்கும் இருந்த புறப்பகை போதாது என்று,
அந்தந்தக் கட்சிகளுக்குள்ளேயே உட்பகையும் தலைவிரித்து ஆடத்
தொடங்குகின்றது. பயன் என்ன? நன்மை செய்யத் தொடங்கினவர்கள்,
அறிந்தோ அறியாமலோ தீமை செய்து பழகுகின்றார்கள். வழி காட்டத்
தொடங்கினவர்கள் எதிர்கட்சியை வெல்ல முனைகின்றார்கள். அரசியல்
முன்னேற்றம் என்று தொடங்கினவர்கள் கட்சி முன்னேற்றம் என்று நின்று
விடுகின்றார்கள்.

ஆட்சிமுறைகள்

     வெற்றி யாருக்கு? உண்மையை உரைத்தவர்களுக்கா? உண்மையை
மறைத்தவர்களுக்கா? மக்கள் பலரும் அறிவு பெற்று வாழும் நாட்டில்
உண்மையை உரைத்தவர்களுக்கே வெற்றி உண்டு. அறிவுடைய மக்கள்
அரசியல் தொண்டர்கள் கூறுவதைக் கேட்பார்கள்; கேட்டுக் கண்மூடி ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள். ஆராய்ந்தே கொள்வார்கள். ஆனால்