பக்கம் எண் :

உரிமைப் பஞ்சம் 121

இடம் ஏற்படாது. பெரும்பாலோர் விருப்பத்துக்கு மாறுபட்டால் நமக்குப்
பதவியும் இல்லை. செல்வாக்கும் இல்லை என்று அறியக்கூடிய நிலைமையில்
தகுதித் தேர்தல் இருப்பதால், பொதுமக்களின் விருப்பமே என்றைக்கும்
நிறைவேறும்; அரசாட்சி நிலைபேறானதாக இருக்கும்; அடக்குமுறைக்கோ,
கொலையியலுக்கோ இடம் இருக்காது. ஆனால் ஒன்று மறைந்து போகும்;
கட்சி அமைப்பு மறைந்துவிடும். கட்சியை மதித்து நாட்டை மறப்பவர்களுக்கு
வாழ்க்கை இருக்காது. அதனால்தான் கட்சி அமைப்பு அழியுமே என்று
அஞ்சி, இன்று உள்ள அரசியல் அறிஞர்கள் ஒருமுகமாகக் கட்சித்
தேர்தலையே போற்றி வருகின்றார்கள். நிதி நிலையத்தில் பணம் சேர்த்துக்
கவலையில்லாமல் வீட்டில் உறங்கி வந்தவர்கள் அதைக் கலைக்க மனம்
கொள்வார்களா? ஆனால் அவர்களுடைய இன்ப வாழ்க்கைக்காக யார்
பலியாவது? பொது மக்கள், எத்தனை நாள் இவ்வாறு ஏமாந்து கட்சித்
தேர்தலில் தனியுரிமை இழந்து வாடுவார்கள்? விழித்து எழும் நாள் விரைவில்
வரும். அன்றைக்குக் கட்சித் தேர்தலை வற்புறுத்துகின்றவர்கள் தன்னலத்தால்
அவ்வாறு செய்கின்றவர்கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

     கட்சி அமைப்பில் நல்லவர்கள் சேர்ந்து தொண்டாற்றும்போது சில
நெருக்கடியான காலங்களில் நன்மை விளைவது உண்டு. நாட்டின் பொதுப்
பகைவராக உள்ள வெளிநாட்டாரை முறியடிப்பதற்கு இந்தக் கட்சி அமைப்பு
உறுதியும் ஊக்கமும் தருவது உண்டு. ஆனால் அந்தக் கடமை முடிந்த பிறகு
நன்மையே தரும் என்று சொல்வதற்கு இல்லை. நல்லவர்களுக்கே இடம்
தருவது போய், தீயவர்களுக்குச் செல்வாக்குத் தருவது உண்டு. எப்படியும்
கட்சி அமைப்பினால் விளையும் நன்மை