பக்கம் எண் :

122அறமும் அரசியலும்

குறைவே; அதுவும் குழந்தையை மருட்டி அடக்கித் தாய் நன்மை செய்வது
போன்றதே. அன்பால் உரிமை கொடுத்துத் திருந்தும் பொறுமை இருந்தால்,
அதற்கு இது இணையாகுமோ?

     போர் இல்லாமல், பங்கீட்டு முறை இல்லாமல், வியாபாரிகள் அரிசி
விற்றுவந்த காலத்தில், அரிசிக் கடைகளில் அரிசி எப்படி இருந்தது?
எப்படியாவது வியாபாரம் ஆக வேண்டும். இன்றைக்கு வாங்குகின்றவர்கள்
நாளைக்கு வர வேண்டும். வாங்க வருகின்றவர்கள் வெறுப்புக் கொண்டால்
வியாபாரம் நடக்காது. அதனால் நல்ல அரிசி வைத்து விற்க வேண்டும் என்று
பலவகை எண்ணங்கள் கொண்டு கெட்டுப்போகாத அரிசியை - உடம்புக்கு
நல்ல அரிசியை - உண்பதற்குச் சுவையான அரிசியைக் - கடைகளில்
வைத்திருந்தார்கள் அல்லவா? ஆனால் போரின் விளைவாகப் பங்கீடு இருந்த
காலத்தில் அதே கடைகளில் அதே வியாபாரிகள் எப்படிப்பட்ட அரிசியை
விற்றார்கள்? கெட்டு அழுகிய அரிசி, நிறமும் திரிந்து சத்தும் இழந்த அரிசி,
சுவை கெட்டு உடலைக் கெடுக்கும் அரிசி எதுவானாலும் மக்கள் வாங்கித்
தானே தீரவேண்டும் என்று விற்றார்கள். காரணம் என்ன? மேலே உள்ள
அரசாங்கத்தாரின் உறுதியான துணை. மக்களுக்கு நல்ல அரிசி கிடைக்காதபடி
உணவுப் பொருள்களைச் சேர்த்துக் குவித்துள்ள திட்டம். எவ்வளவு கெட்ட
அரிசியானாலும் பொது மக்களின் முறையீட்டை அரசாங்கத்தார் கேட்க
மாட்டார்கள் என்னும் நம்பிக்கை. அரசாங்கத்தார் ஏற்பாட்டின்படி வந்த
அரிசி ஆகையால் நம் குற்றம் அல்ல என்று உணரும் இரக்கமற்ற உணர்ச்சி.
நமக்கு வேண்டியது