பக்கம் எண் :

உரிமைப் பஞ்சம் 125

எதிரிகளின் குற்றமும் எடுத்துப் பறையடித்து, அவர்களாகக் குணமும்
குற்றமும் ஒருங்கே நாடாதபடி பொதுமக்களை மந்தைகளாக்கிப் பழக்கச்
செய்கின்றது. இவ்வளவும் செய்வதன் மூலமாகவே தம் கட்சியை எதிர்கட்சிக்கு
நிகரான ஆற்றலுடையதாக வளர்த்துக் கொள்ளச் செய்கின்றது.

கட்சிச் சுவர்

     இவ்வளவுக்கும் காரணம் கொலைக்கருவிகள் அல்ல; பகையுணர்ச்சி
ஒன்றேதான். இந்தப் பகையுணர்ச்சியை வளர்த்து அறத்தை மறக்கச்
செய்வதற்குக் கட்சி அமைப்புக் காரணம் அல்லவா? ஒரு கட்சி வலுவடைந்து
உயர்வு பெறுவதைக் கண்டவர்கள் அதில் சேர முயல்கின்றார்கள். கட்சிக்குள்
சேர்வதால் பயனில்லை என்று கண்டபோது கட்சிச் சுவர்க்கு வெளியே
நிற்கின்றார்கள். சுவரை இடித்துத் தள்ள முயல்கின்றார்கள். ஆனால் அது
முடியாது என்று கண்டதும், அந்தச் சுவரையே தம் எல்லையாக வைத்துக்
கொண்டு, சுவருக்கு இப்பால் இருந்து, " நீங்கள் இங்கே வரக்கூடாது
தெரியுமா? நாங்கள் உங்கள் எதிர்கட்சி உங்களோடு நாங்கள் சேரமாட்டோம்.
அதற்காகவே இந்தச் சுவர்", என்று அவர்கள் கட்டிய சுவரையே தம்
அரணாகப் பயன்படுத்துகின்றார்கள். ஒரு கட்சி அறநெறியில்
வளர்ந்திருக்கலாம்; பல நன்மை செய்து உயர்ந்திருக்கலாம். ஆனால் அந்தக்
கட்சி எழுப்பிய சுவர்களையே பயன்படுத்திக் கொண்டு இப்பால்