பக்கம் எண் :

16அறமும் அரசியலும்

மனப்பான்மை வளர்ந்தவர்களுக்கும் அமைந்திருக்கின்றது; வாழ்க்கைக்கு
வேண்டிய பெரிய துறைகளில் பொது மக்களுக்கு இந்த மனப்பான்மையே
இருக்கின்றது. அதனால், எதற்கும் உடனே பயன் விளைய வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் இயற்கையமைப்பு உடனே பயன் தருவது
குறைவாகவே இருக்கின்றது. தீமை செய்வன எல்லாம் உடனே பயன்
தருகின்றன. நல்லன உடனே பயன் தருவது அருமை. அழிவு வேலை
விரைவில் பயன் விளைக்கின்றது. ஆக்க வேலையோ நெடுங்காலம் கழித்தே
பயன் விளைக்கின்றது. உண்ட உடனே நஞ்சு தன் ஆற்றலைப்
புலப்படுத்துகின்றது. ஆனாலும் பாலும் பழமும் அவ்வாறு உடனே பயனைப்
புலப்படுத்துவதில்லை. இயற்கை இவ்வாறு அமைந்திருப்பது வியப்பாகவே
உள்ளது.

     உண்மையை ஒத்திவைக்கும் இன்றைய உலகத்தாரின் முயற்சி விரைவில்
பயன் தரத் தக்கதாக இருக்கின்றது; வெற்றியை ஒத்திவைக்கும்
நாளையுலகத்தாரின் முயற்சியோ அவ்வாறு இல்லை. ஆகையால் மக்களின்
போற்றுதல் இன்றையுலகத்தார்க்கே எளிதில் கிடைக்கின்றது. அவர்களும்
மக்கள் மனப்பான்மைக்கு ஏற்றவாறு உரைக்கின்றார்கள்; மக்களும் கேட்டதைக்
கேட்டவாறே கொள்கின்றார்கள்; எண்ணுவதும் ஆராய்வதும் உணர்வதும்
ஆகிய முயற்சித் துன்பங்களும் இல்லை! இன்னொரு வகையாக