அமைதி அற்றுப்போய்ப் போர்த்தொல்லை நிலவி வருகின்றது. நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், குடும்பத்திற்குச் குடும்பம் போர்க்கோலம் தாங்குவதும் வஞ்சம் சூழ்வதும் உறிஞ்சலை மேற்கொள்வதும் இயற்கையாகிவிட்டன. இந்த நிலைமையை மாற்ற எத்தனை அரசியல் நூல்கள் பெருகினாலும் பயன் இருக்காது ; எவ்வளவு அறிஞர்கள் பெருகினாலும் பயன் இருக்காது; எத்தனை போர்களுக்கு முடிவு கண்டாலும் பயன் விளையாது; எத்தனை அமைதி உடன்படிக்கை மாநாடுகள் கூடினாலும் பயன் விளையாது. |