பக்கம் எண் :

28அறமும் அரசியலும்

2. அறம் வாழுமா?

மக்கள் குறையா?

     குறுகிய நோக்கம் உடையவர்களின் தன்னலத்துக்கு உலகம்
இரையாகாமல் பரந்த நோக்கம் உடையவர்களின் தொண்டுக்கு இடம் தந்து
தற்காப்புச் செய்து கொள்ளும் நல்ல நிலை வரவேண்டும். இன்னொரு
வகையாக நோக்கினால், குறுகிய நோக்கம் உடையவர்களின் தலைமையை
ஒரு பக்கம் ஒதுக்கும் வல்லமை மக்களுக்கு வர வேண்டும்; அருள் நெஞ்சம்
பெற்றவர்கள் காட்டும் வழியில் நடக்கும் ஆற்றல் மக்களுக்கு வரவேண்டும்.

     இன்று மக்களின் நிலைமை அப்படிப்பட்டதாக இல்லை. குற்றம் மக்கள்
மேல் இல்லை. மக்கள் வாழ்க்கை அமைந்த அமைப்பிலேயே உள்ளது.
நோயாளியைப் பார்த்து "எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உன்
நோயைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது. உன் உடலைப் பற்றிய
எண்ணமே வரக்கூடாது. இந்த நூலைப்படித்துக் கொண்டிரு. அல்லது அந்தத்
சோலையைப் பார்த்துக் கொண்டிரு. அதில் கிளிகளும் புறாக்களும் பறந்து
பறந்து விளையாடும் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிரு. குயில்களும்
பூவைகளும் பாடும் பாட்டுகளைக் கேட்டு கொண்டிரு", என்று
அறிவுறுத்தினால் பயன் உண்டாகுமா? நோயாளியின் மனம் நூலில்
செல்லுமா? கிளியும் புறாவும் ஆடும் ஆடல் அவனுடைய கண்ணைக்
கவருமா? குயிலும் பூவையும் பாடும் பாடல் அவனுடைய செவியை
இன்புறுத்துமா? வயிற்றில் உள்ள