பக்கம் எண் :

அறம் வாழுமா? 31

     அரசியலைப் பொறுத்தவரையில் இன்று பொது மக்கள் குடிகாரரின்
நிலையிலே இருக்கின்றார்கள். தங்களுக்கு உள்ள குறைகளைத்
தீரக்களைவதற்கு உரிய வழிகளை நாடி நடக்கும் ஆற்றல் அவர்களுக்கு
இல்லை. பரந்த நோக்கம் உடைய அறிஞர் காட்டும் வழியில் நடப்பது
அருமை என்றும் தொல்லை என்றும் உணர்ந்து ஒதுங்குகின்றார்கள். குறுகிய
நோக்கம் உடையவர்கள் அழைப்பதற்கு முன்னே தாமே ஓடிப்போய்
அவர்களைத் தலைவர்களாக்கிப் புகழ்ந்து ஏவல் கேட்கக் காத்து
நிற்கின்றார்கள்; அவர்கள் சொல்லியாவாரெல்லாம் நடக்கின்றார்கள்;
அவர்கள் சொல்லும் வழிகள் எல்லாம் எளிய வழிகள் என்றும் உடனே
பயன் அளிக்கும் வழிகள் என்றும் உணர்ந்து போற்றுகின்றார்கள்.

     சில வேளைகளில் குடிகாரர் அறிஞர்களை வெறுப்பதும் உண்டு;
கள்ளின் தீங்கை எடுத்துச் சொல்லும் போது சினம் கொள்வதும் உண்டு;
எதிர்ப்பதும் உண்டு. அரசியலில் பொதுமக்களும் பரந்த நோக்கம் உடைய
நல்லறிஞரை வெறுப்பதும், சினப்பதும், எதிர்ப்பதும் உண்டு.

     பொதுமக்களைக் குறை கூறுவதால் பயனில்லை. அவர்கள் அறியாமை
உடையவர்கள். அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு அரசியலில் முன்னேறும்
தன்னலத்தாரைக் குறை கூறலாம். ஆனால் அவர்களுடைய தன்னலத்திற்கும்
காரணம் இருக்கின்றது. வாழ்க்கைப் போராட்டம் அவர்களை மட்டும்
விட்டுவிடுமா? எப்படியாவது வாழ்க்கைப் போட்டியில் வெற்றிபெற
வேண்டுமென்று தவறான வழியிலும் சென்று பொதுமக்களின் அறியாமையைப்
பயன்படுத்திக் கொண்டு