| தலைமை பெறுவதற்கு முயல்கின்றார்கள். அபினி முதலிய மயக்கப் பொருள்களை விற்கும் கடைக்காரர்களைக் குறைகூறிப் பயன் என்ன? எப்படியாவது வாழ வேண்டும், வாழ்ந்து முன்னேற வேண்டும். நிலையும் புகழும் பெற வேண்டும். அதற்காகப் பொருள் வேண்டும். பொருள் சேர்ந்துவிட்டால் அறிஞர்களும் நம்மைப் புகழ்வார்கள். ஆகையால் எந்தத் தொழில் செய்தாவது பொருள் திரட்ட வேண்டும் என்று பல நாள் பலவாறு எண்ணித்தான் சிலர் அபினிக் கடை கள்ளுக்கடை முதலிய கடைகளை வைத்து வாணிகம் செய்கின்றார்கள். ஆகவே, செய்ய வேண்டிய கடமை என்ன? கள்ளுக்கடை முதலியவற்றை மூடுவதா? கள் வாணிகம் செய்வோரைத் தடுப்பதா? இரண்டும் கருதியவாறு வெற்றி பெறுவது அருமையே. கள்ளச் சாராயம் உண்டாக்குவது கள்ளச் சாராயம் விற்பது இவற்றைத் தடுக்க வேண்டிய வேறு கடமை வந்து சேரும். அரசியலில் பொதுமக்கள் தவறான வழியில் போகாதபடி தடையுத்தரவுகள் பிறப்பிக்கலாம்; இரண்டும் செய்த பிறகும் இடையூறுகள் மலிந்து கொண்டே போகும். எதிர்க்கட்சி யிலிருக்கின்றவர்கள் ஆளும் கட்சியில் வந்து சேர்வார்கள்; நேர்முகமான எதிர்ப்புக்கள் குறைந்து மறைமுகமான இடையூறுகள் பெருகும். கவலையும் சோர்வும் ஆகவே, உண்மையாகச் செய்யத்தக்க வழி என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏன் சிலர் கள்ளுக்கடை முதலியவைகளை நடத்த முன்வருகின்றார்கள் என்று அதன் |