பக்கம் எண் :

38அறமும் அரசியலும்

     இன்று பெரும்பாலும் அரசியலில் உழைப்பவர்கள் நோயாளியைப்
பார்த்து உடலை மறந்திருக்கும்படி உபதேசம் செய்கின்றவர்கள். இவர்களைப்
பார்த்துச் சுட்டிக் கூற வேண்டியது, "நோயாளியின் நோயைப்
போக்குங்கள். முதலில் அதைச் செய்யுங்கள். பிறகு உடலை மறந்திருக்கக்
கற்றுக்கொடுங்கள்", என்பதே ஆகும். உண்மையாகவே, நோயில்லாமல்
நலமாக இருப்பவர்கள் தம் வயிற்றைப் பற்றி எண்ணுவதே காணோம்.

     அரசியலில் உள்ள நோய் நிலையைப் பண வேட்டை என்று
குறிப்பிடலாம். அந்த நோயைத் தீர்த்து நல்வாழ்க்கை தேடுவோரின் நோக்கம்
அறநாட்டம் என்று குறிப்பிடலாம். பொருட்கவலை உற்ற மக்களைப் பார்த்து,
இன்று அறிஞர்கள், "அருமை மக்களே! நீங்கள் பொருட் கவலையை மறந்து,
அறத்தில் கவலை கொள்ளுங்கள். அறத்தை நாடினால் பொருட்கவலை தானே
தீர்ந்துபோகும்," என்று உபதேசம் செய்கின்றார்கள். ஆனால் இந்த முயற்சி
எவ்வளவு பயன் தந்தது? உலகத்தில் அறத்தைப் பற்றிய தெளிவு ஏற்பட்ட
நாள் முதலாக இதை விடாமல் செய்தே வருகின்றார்கள். புத்தர், ஏசு முதல்
எல்லாப் பெரியோர்களும் இதைச் செய்து வந்திருக்கின்றார்கள். ஆனால்
எவ்வளவு பயன் தந்தது? அரசியல் தலைவர்களில் பலர் இதையே வேறு
வேறு வடிவில் எடுத்துக்கூறி வற்புறுத்துகின்றார்கள். பயன் என்ன? இன்று
வரையில் பொருட்கவலை எள்ளளவும் குறையவில்லை. படிப்படியாக வளர்ந்து
மிகுந்து கொண்டே வருகின்றது. அறத்தைப் பற்றிய நாட்டமோ மெல்ல
மெல்லக் குறைந்து கொண்டே வருகின்றது. முன்னோர்கள் காலத்தில்
தனிப்பட்ட செல்வர் வறியர் சிற்சிலருடைய