பக்கம் எண் :

அறம் வாழுமா? 39

வாழ்க்கையில் இருந்த பொருட் கவலை இப்போது அன்பு வளர்க்கும்
காதலருடைய உள்ளங்களிலும் எந்நாளும் நிறைந்திருக்கின்றது; அறிவு
வளர்க்கும் கல்வி நிலையங்களிலும் கலை மண்டபங்களிலும் புகுந்திருக்கின்றது.
சுருங்கச் சொன்னால், பழங்காலத்தில் அறம் குடிகொண்டிருந்த
நிலையங்களிலும் இப்போது பண வேட்டையே இடம்பெற்று வாழ்கின்றது.
ஆகவே, சான்றோர் செய்த முயற்சிகள் எவ்வளவு பயன் விளைத்தன என்று
எண்ணிப் பார்க்க வேண்டும்.

அற நாட்டம்

     அறத்தை நம்பி அமைதியாகக் குடும்பத்தின் அளவில் நின்று
வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்,"நல்லவர்களுக்குக்
காலம் இல்லை. நமக்கெல்லாம் இடம் இல்லை". என்று சொல்லி மூலையில்
வாடுகின்றார்கள். குடும்பத்தைவிட்டுச் சிறிது விரிந்த எல்லையில் நின்று ஊர்த்
தொண்டோ வேறு உதவியோ செய்து வாழ முயல்கின்றவர்களும்,"நாமெல்லாம்
என்ன செய்தாலும் பயன்படாது; பேசாமல் மூலையில் அடங்கிக் காலம்
கழிப்பதே நல்லது", என்று மெல்ல மெல்ல ஒதுங்குகின்றார்கள், சமயம், மொழி
முதலான துறைகளில் இருந்து தொண்டு செய்ய முன்வருகின்றவர்களும்
நாளடைவில் சோர்வு அடைந்து “உலகம் பொல்லாதது" என்று சொல்லிப்
பின்வாங்குகின்றார்கள். அறத்தைப் போற்றும் மனத்தோடு அரசியலில்
ஈடுபட்டவர்களோ, "ஏமாற்றமும் வெறுப்பும் அடைந்தவர்களாய், நம்மைப்
போல் உண்மையானவர்களுக்கு அரசியலில் இடம் இல்லை. உள்ளொன்று
வைத்துப் புறம் ஒன்று பேசிப் பொதுமக்களை ஏய்த்து வஞ்சித்துப் பதவி
வேட்டை