| உலகத்தில் கண்டறிந்த காட்சி அல்ல. ஆகையால், சமூகத்தையே அப்படி அமைக்க வேண்டும் என்னும் அரசியல் கொள்கை பண்டைக் காலத்தில் இருந்ததில்லை. அவர்கள் வற்புறுத்தியதெல்லாம், தனிப்பட்டவர்களின் உய்வும் உயர்வும் குறித்ததே ஆகும். அதனால், தனிப் பட்டவர்களைப் பார்த்து, தனித் தனியே பணவேட்டையை விட்டொழிக்குமாறு வற்புறுத்தி இருக்கின்றார்கள். தனித் தனியாகப் பணவேட்டையை விட்டு அவரவர்கள் நல்ல நிலை அடையலாம் என்று வழிகாட்டினார்கள். அந்த நல்ல நோக்கத்தோடுதான் துறவுநிலையும் வற்புறுத்தப்பட்டது. ஒருவன் துறந்து தனியே வாழாமல், மனைவி மக்களோடு குடும்பம் காரணமாகப் பணவேட்டையில் ஈடுபட்டுக் கெட்டுவிடுவான் அல்லவா? அதனால், குடும்பத்தைத் துறந்து தனியே வாழ்தலும் அறமாகக் கூறப்பட்டது. குடும்பத்தைத் துறக்காமல் இல்லறத்தில் வாழ்கின்றவர்களும் பணவேட்டைக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றே அன்பைப் பெருக்கி விருந்தோம்பும் அறம் வகுத்துக் கூறப்பட்டது. வீடு முதல் நாடுவரையில் எல்லாப் பற்றும் விட்ட பிறகும், உடம்பு காரணமாகப் பொருட்பற்று நிரம்பிப் பணவேட்டை இடம் பெறும் என்று கருதியே யாக்கை நிலையாமை எடுத்துக்கூறப்பட்டது. இவ்வாறே அகப்பற்றும் புறப்பற்றும் (அகங்காரம், மமகாரம்) இரண்டும், நீங்கினால்தான், மனிதன் நல்வாழ்க்கை வாழ்ந்து சீர்பெறலாம் என்று அறநெறியில் வாழ்ந்த சான்றோர் வற்புறுத்தி உள்ளார்கள். அடிப்படைக் காரணம், உலக வாழ்க்கைத் துறைகள் எல்லாம் செய்வதால், அவற்றைத் துறப்பதே நல்லது என்று எடுத்துக் கூறி வந்தார்கள். இதனால் பயன் என்ன? நாட்டின் மூலைமுடுக்குகளில் ஒரு சிலர் அவ்வப்போது |