பக்கம் எண் :

42அறமும் அரசியலும்

அறவோராக, உண்மையாளராக பண்பட்டவர்களாக வாழ்ந்து உயர முடிந்தது.
பொது வாழ்க்கையில் அறத்திற்கும் உண்மைக்கும் பண்பாட்டுக்கும்
இடமில்லை. ஆத்திகப்போர்வை - ஒழுக்கக்கேடு, அரிச்சந்திர வழிபாடு -
கள்ள வாணிகம், திருக்குறள் பெருமை - விலங்குணர்ச்சி இப்படிப் போலி
வாழ்க்கை பெருகி விட்டது. சுற்றிலும் பாலைவனக் காட்சி, இடையிடையே
சிற்சில நீரூற்று இதுதான் இன்றைய உலகம்.

தனி மனிதன் - உலகம்

     மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என ஆசையை மூன்று
வகைப்படுத்திக் காட்டி அவற்றைத் துறக்க வேண்டும் என்று வலியுறுத்தி
வந்தார்கள். மண்ணாசையும் பொன்னாசையும் சேர்ந்த ஒன்றே பணவேட்டை
எனலாம். இவற்றோடு பெண்ணாசையையும் சேர்த்துக் கடிந்து கூறினார்கள்.
சிலர் இல்வாழ்க்கையும் தகாது என்ற கடிந்தார்கள். புலன்களுக்கு அடிமைப்
பட்டு இந்திரிய வயமயங்கி இந்த ஆசைவலையில் அகப்பட்டுக்கொண்ட
பிறகு மேலும் மேலும் பொருளாசையே இழுத்துச் செல்கின்றது; பொருள்
மிகுந்தால்தான் இல்வாழ்க்கையில் இன்பம் என்ற அந்த ஆசை இழுக்கின்றது.
வரம்பு மீறிய வாழ்க்கையில் தலைப்பட்டுப் பிறமகளிரை நாடுகின்றவர்களுக்குப்
பொருளின் தேவை மிகுதியாகின்றது. ஆகவே, பெண்ணாசையும் திரும்பத்
திரும்பப் பண ஆசைக்கே தூண்டுகோலாகின்றது. இவ்வாறு