பக்கம் எண் :

குறுகிய நோக்கம் 5

விட்டு வெளியே போயிருந்த வேளையில் பக்கத்துத் தெருவில் உள்ளவர்கள்
அங்கு வந்து அந்த உணவுப் பொருளை எடுத்து உண்டார்கள்; முயற்சி
செய்து தேடுவதைவிட, மற்றவர்கள் தேடி வைத்ததை எடுத்துக் கொண்டுபோய்
நுகர்வது எளிது அல்லவா? இதை உணர்ந்த தெரு மக்கள் அந்த அந்தக்
குடிசைகளில் விலங்குகள் நுழையாதபடி சுவரும் வேலி முதலியனவும்
அமைத்தது போலவே, பக்கத்துத் தெருவில் வாழும் மக்களின் கொள்ளையைத்
தடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டி நேரிட்டது. கூட்டமாக எல்லோரும்
தெருவை விட்டுப் போகாமல் காவலுக்குச் சிலரை வைத்துவிட்டுப் போக
நேர்ந்தது. விலங்குகளைத் துரத்த வந்திருந்த தடியும் ஈட்டியும் மக்களைத்
துரத்தியடிக்கவும் பயன்பட்டன. விலங்குகளின் அறிவு வளராது. மக்களின்
அறிவு வளரும் அல்லவா? அதிலும், உழைக்கும் மக்களுக்கு அறிவு வளர்ச்சி
குறைவு; உழைப்பு இல்லாத மக்களுக்கே அறிவு கூர்மையாக வளரும்
அல்லவா? கொள்ளைக் கூட்டத்தார் வெறுங்கையோடு வராமல் திறமையான
கருவிகளைச் செய்து கொண்டு கொள்ளை அடிக்க வந்தார்கள். அதனால்
உணவு தேடும் வேலைக்கே முழு முயற்சியும் செய்வது போய் அதைக் காவல்
காத்துப் போர் செய்வதற்கு உரிய கருவிகளைச் செய்வதிலும் முயற்சியைச்
செலுத்த வேண்டியதாயிற்று.

     அந்தக் தெருவின் மக்களிலேயே சிலர் சோம்பேறிகளாக இருக்க நேரும்
அல்லவா? அறிவு வளர்ச்சி காரணமாகவோ உடல் மெலிவு காரணமாகவோ,
சோம்பல் வளர்ந்த பிறகு, வெளியே சென்று