பக்கம் எண் :

58அறமும் அரசியலும்

      இவ்வாறே இனத்தை இடமாகக் கொண்டும் பணம் போர் தொடங்கி
யிருக்கின்றது. இன்று இனங்கள் பலவாகப் பிரிந்து ஓர் இனம் மற்றோர்
இனத்துடன் பகைத்து நிற்பதைக் காணலாம். அந்தப் பகைக்கு அடிப்படையில்
பணம் காரணமாக இருக்கின்றதே அல்லாமல், உண்மையான இனப்பற்றுக்
காரணமாக இருக்கவில்லை; ஓர் இனத்தால் பல ஏழைகள் ஒன்று சேர்ந்து, தம்
வறுமைக்கும் துன்பத்திற்கும் காரணம் மற்றோரினத்தில் உள்ள செல்வர்கள்
என்று எண்ணும் எண்ணம் வளர்ந்து விட்டது. ஆகவே இனத்தின் பெயரால்
பணம் பிரிவுகளை அமைத்து விட்டது.

     இவ்வாறே நிறத்தின் பெயரால் ஒருவகை மக்கள் மற்றொரு
வகையாருடன் பகைத்து வாழ்கின்றார்கள். ஒரு நிறத்தார் வறுமையால் வாடி,
தம் வறுமைக்குக் காரணம் மற்றொரு நிறத்தார் செய்யும் கொடுமையே என்று
எண்ணுகின்றார்கள். இவர்களோ தம் செல்வ வளத்தைக் கண்டு அவர்கள்
பொறாமைப்பட்டுக் கலகம் செய்வதாக எண்ணுகின்றார்கள். இவ்வாறு
பெயரளவில் நிறம் காரணமாக வைத்துக்கொண்டு, பணப் பெருக்கமும்
வறுமையும் உண்மைக் காரணமாகக் கொண்டு பூசலும் புன்மையும் பெருக்கி
வாழ்கின்றார்கள். நிறத்தின் பெயரால் பணம், பகை அமைத்துள்ள கதை இது.

     ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பாருடன் பகைத்து வாழ்வதற்கும்
அடிப்படைக் காரணம் இப்படிப்பட்டதே. ஒரு வகுப்பார் சீரும் செல்வமும்
பெற்று மற்றொரு வகுப்பாரைக் கைத்தூக்கிவிடாமல்