பயன்பட்டது. தன்னலத்தை வெல்லுவதற்காகக் காணப்பட்ட ஊழ் தன்னலத்தைப் பெருக்குவதற்குப் பயன்பட்டது. ஆனால் குறுகிய நோக்கம் உடையவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள முடியுமே அல்லாமல், ஊழை ஏமாற்ற முடியாது. எல்லையற்று விரிவாக உணர்கின்ற நல்லுணர்வே வாழ்க்கை என்றும், குறுகிக் குறுகிச் சுருங்கி நிற்கின்ற உணர்வே சாவு என்றும், விவேகாநந்தர் முழங்கியுள்ளார். தனி மனிதன் சொத்து உரிமையே மெய்ந்நெறிக்குப் புறம்பானது என்றும், குற்றம் என்றும் இராமதீர்த்தர் வற்புறுத்தியுள்ளார். இவற்றை எல்லாம் ஆத்திகர் எண்ணிப் பார்க்காமல் புறக்கணிப்பதால்தான், உலகத்தில் அறம் தேய்கின்றது. இனம் - ஊழ் செல்வர்கள் என்று ஓர் இனமாய் இயைந்து வாழ்கின்றவர்களைக் காண்கிறோம். அவர்கள் தம்மைப் போல் செல்வமுள்ளவர்களிடமே பழகுகின்றார்கள்; பொருள் கொடுத்தல் வாங்கலும் செல்வரிடமே செய்து கொள்கின்றார்கள். பெண் கொள்வதும் கொடுப்பதும் இவ்வாறே பண்டமாற்றுப்போல் செல்வர்களிடத்திலேயே பழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள். ஏழைகளிடம் பணம் சேராதபடியும் தம்மிடமே பணம் திரளும்படியும் தக்க ஏற்பாடுகள் செய்கின்றார்கள். அதன் பயனாக, அவர்களிடம் உள்ள பொருளைக் கவரவும் திருடவும் கொள்ளை கொள்ளவும் ஏழைகளின் மனத்தில் எண்ணங்கள் எழுகின்றன. அவர்களிடமிருந்து தம்மையும் தம் பொருளையும் காத்துக் |