பக்கம் எண் :

94அறமும் அரசியலும்

4. கட்சி அரசியல்

பொது நோக்கம்

     உலகம் முன்னேற வேண்டுமானால், அறம் செழிக்க வேண்டுமானால்,
இதுபோலவே சடங்குகளும் விழாக்களும் பொது நோக்கம் பெற்றுத் திருந்த
வேண்டும். தனி வாழ்க்கை பற்றிய சடங்குகளும் விழாக்களும் சுருங்க
வேண்டும். ஒடுங்க வேண்டும். திருமணம் முதலியவைகளுக்கு உரியவர்கள்
மட்டும் சென்று நடத்தி வைக்கும் பழக்கம் வேண்டும்; பெருங்கூட்டம்
சேர்ப்பது குற்றமாக, பழியாக, அநாகரிகமாகக் கருதப்பட வேண்டும். ஆனால்
நாட்டுவிழா அல்லது சடங்கு, ஒரு கலைக்கழகத்தின் ஆண்டுவிழா அல்லது
கொடியேற்றும் சடங்கு முதலியவைகளுக்கு எல்லோரும் திரள வேண்டும்.
தனி ஒருவர் பெயரால் நடக்கும் எந்தச் சடங்கிற்கும் விழாவிற்கும் கூட்டம்
சேரும் முறையும் சேர்க்கும் முறையும் கடியப்பட வேண்டும். நாட்டு
முன்னேற்றத்திற்கும் உலக முன்னேற்றத்திற்கும் அந்த முறைகள்
முட்டுக்கட்டைகள் என்பதை உணர வேண்டும். எல்லாவற்றிலும் தம்மை
மறந்து பொதுமை மேற்கொள்வதே உலகத் தொண்டர்களாக உழைத்த புத்தர்,
காந்தி முதலான சான்றோர் காட்டிய நெறி. ஒரு செல்வர் தம் சிறுவனைப்
பள்ளிக்கூடத்தில் வைத்து எழுத்தறிவு தொடங்கும் நாளில் ஆயிரக்கணக்காகச்
செலவு செய்கின்றார். ஆனால் அந்தப்