இயலும் பிரிந்தது. இது வியப்பாக இருக்கலாம்; ஆனாலும் உண்மை இது தான். | குழந்தையின் பேச்சை ஆராயலாம், அதன் கைகால் அசைவே ஆடல்; அதன் இனிய ஒலிகளின் ஒழுங்கே பாடல்; இத்தகைய ஆடலும் பாடலும் இல்லாமல் குழந்தை பேச முடியாது. நாளடைவில் கருத்துக்கள் வளர்ந்த பிறகே குழந்தையின் ஆடல் பாடல் குறைந்து பேச்சு மிகுகின்றது. குழந்தையைக் கதை சொல்லுமாறு செய்து கேட்டுப் பார்க்கலாம். அப்போது அதன் வாயொலிகள் மட்டும் அல்ல; கைகால் அசைவுகளும் ஒலி ஒழுங்குகளும் சேர்ந்தே அந்தக் கதை புறப்படும். கதையில் ஒரு குரங்கு மரத்தில் ஏறினால், குழந்தையின் கைகளும் அடிக்கத் தொடங்கும். உடனே அந்தக் குழந்தையின் முதுகே அடிபடுவது போல் நெளிந்து கொடுக்கும், கதையில் ஒருவன் அழுதால், குழந்தையின் முகத்தில் அழுகையின் தோற்றம் நிலவும். கதையில் ஒருவன் சிரித்தால், குழந்தையின் இதழ்களில் முறுவல் நிலவும், கூத்துக் கலையின் அடிப்படை இவைகளே அல்லவா? வளர்ந்த மனிதனும் உணர்ச்சி மயமாக நிற்கும்போது இத்தகைய குழந்தை ஆகின்றான்; அப்போது பேச்சில் ஆடல் பாடல்களின் அடிப்படைகளைக் காணலாம். | தொடக்கத்தில் ஆடல் நிகழ்ந்தபோது ஒலியும் கலந்து நிகழ்ந்தது. ஒலி இல்லாமல் அழவும் சிரிக்கவும் முடியாத குழந்தை போலவே மனிதன் இருந்தான். இன்றும் பெரும்பாலும் ஒலியின் துணை இல்லாமல் கூத்துக் கலை நிகழ்வதில்லை. அந்த ஒலியே இசை என்று கூறப்பட்டது. இவ்வாறு ஒன்றாகப் பிறந்து வளர்ந்த கூத்து. இசை என்னும் இரு கலைகளில் கூத்து என்னும் கலை தனித்து வாழ முடியவில்லை. ஆனால், இசை தனித்து வாழவும் வளரவும் முடிந்தது. | | |
|
|