பாட்டில் இருவகைச் செல்வம் உண்டு; ஒன்று ஒலிநயம் என்னும் செல்வம்; மற்றொன்று உணர்ச்சி என்னும் செல்வம். இந்த இரண்டும் சிறப்புற அமைவதே சிறந்த பாட்டு. அதனால், இந்த இரண்டிற்கும் இடையே நெருக்கடி நேர்வது உண்டு. அப்போது ஒலிச் செல்வம் பெரிதா, உணர்ச்சிச் செல்வம் பெரிதா என்று ஆராய்ச்சி வேண்டியதாகிறது. | பொன் கிண்ணத்தில் நெய்ச் சோறு இட்டு ஊட்ட விரும்புவதே தாயின் இயல்பு. உயர்ந்த ஒலியமைப்பில் சிறந்த உணர்வுச் செல்வத்தை வைத்து உலகிற்கு அளிப்பதே கவிஞர் இயல்பு. ஆயின் சில வேளைகளில் பொன் கிண்ணத்தில் வெறுந் தண்ணீர் காணப்படும். ஆலிலையில் நெய்ச்சோறு காணப்படும். பசி அறியாத குழந்தை சோற்றை வெறுக்கும் நிலையில் இருந்தால். கண்ணுக்குக் கவர்ச்சி உள்ள பொன் கிண்ணத்தை எடுத்து விளையாட முயலும், அந்தக் குழந்தையின் அண்ணன் அறிவு வளர்ச்சி உள்ளவனாய், உணவின் தேவையை உணர்ந்தவனாய் இருந்தால், பொன் கிண்ணத்தைப் பொருட்படுத்தாமல் விட்டு இலையில் காணும் நெய்ச் சோற்றையே எடுத்து உண்பான். அது போன்ற நிலையே, பாட்டுக் கலையைப் பயன்படுத்தும் மக்களிடையிலும் காணலாம். கருத்துப் பசி இல்லாமல், கலைப் பண்பு அறியாமல் வாழும் மக்கள் குழந்தைகள் போல் ஒலி நயம் மட்டும் தேடிச் | | |
|
|