பக்கம் எண் :

  16. எள்ளும் எண்ணெயும்
 
     யாரோ ஒருவர் காதல் துறைகளை அமைத்து நானூறு கட்டளைக் கலித்துறை
பாடி, அந்த நூலுக்குக் கோவை என்று பெயரிட்டார். அவரைப் பின்பற்றி மற்றொருவர்
அவ்வாறே நானூறு செய்யுளும் இயற்றினார். இவ்வாறு சிலர் பின்பற்றிச் செய்த பிறகு,
கோவை என்றால் அகப்பொருள் துறைகளை அமைத்துக் கட்டளைக் கலித்துறையாக
நானூறு செய்யுள் இயற்ற வேண்டும் என்ற விதி ஏற்பட்டது.
 
     இவ்வாறே கலம்பகம், பரணி, அந்தாதி முதலிய பல நூல்களும் ஏற்பட்டு,
அவற்றிற்கு விதிகளும் அமைக்கப்பட்டன.
 
     பிறகு வந்தவர்களில் யாரேனும் கோவை நூல் இயற்ற வேண்டும் என்று
விரும்பினால், அவர் இருநூறு செய்யுள் இலக்கியச் சுவையுடன் பாடி நிறுத்திக்கொள்ள
முடிவதில்லை. தன் உணர்வு இருநூறு செய்யுளின் அளவே இருப்பதாயினும் மேலும்
இருநூறு செய்யுளை எப்படியாவது எழுதி நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு
உள்ளானார். அவ்வாறே உணர்வு மிக்க ஒருவர் அறுநூறு செய்யுள் இயற்றக்
கூடியவராக இருப்பினும், இரு நூற்றையாவது குறைத்து விடல் வேண்டும். ஒருவர்
கட்டளைக் கலித்துறையால் தம் உணர்வை அமைக்க