பக்கம் எண் :

120 இலக்கிய ஆராய்ச்சி
 
ஆகாது. வளர்ச்சிக்குத் தடையாய்க் கட்டுப்படுத்தும் விதிகள் தேவையில்லை என்பதை
உணர்தல் வேண்டும்.
 
     யாரோ ஒரு புலவர் 89 செய்யுள் இயற்றி அகப் பொருள் துறைகளை முடித்தபின்.
நானூறு என்று முழு எண்ணாக அமைதல் நன்றாயிருக்குமே என்று கருதி இன்னும்
பதினொரு செய்யுள் இயற்றி நானூறாக்கிக் கோவை நூல் தந்திருக்கலாம். ஆனால்,
இருநூறு செய்யுள்களே சுவைபட இயற்றக் கூடிய மற்றொருவர் என்ன செய்வர்?
அதற்காக அவர் மேலும் இருநூறு செய்யுள் இயற்ற வேண்டுமா? இயற்றின் அந்த நூல்
என்ன ஆகும்?
 
     முனிவர் ஒருவர், ஆசிரமத்தில் வளர்ந்துவந்த பூனையின் தொல்லையைக்
 குறைப்பதற்காக, தாம் நிட்டையில் அமரும் வேளையில் அந்தப் பூனையைக்
கட்டிப்போட்டு அதற்குப் பால் வார்க்குமாறு பணித்தாரம். அவர் இறந்த பிறகு, அந்தப்
பணி தொடர்ந்து நடந்து வந்ததாம். அந்த பூனையும் இறந்த பிறகு, வேறு பூனையைச்
சீடர்கள் ஆசிரமத்திற்குப் பிடித்துவந்து விட்டார்களாம்! அரசியல் துறையிலும் சமயத்
துறையிலும் இக் கதையை விளக்கும் செயல்களும் சடங்குகளும் பல உண்டு. இலக்கியத்
துறையில் இந்தப் போக்கு இருந்தால், அது பெருங்குறையே ஆகும்.
 
     இலக்கியம் உணர்ச்சிக்குப் புலவர் தரும் கலைவடிவம்; அது வளர்ச்சி உடையது;
உயிரினங்களைப் போன்ற வாழ்வும் உடையது. அத்தகைய இலக்கிய ஒளி பெற்று வாழ
வேண்டுமானால், விதிகள் அதன் ஆக்கத்திற்குத் தடையாக நிற்றல் கூடாது.
 
     தொல்காப்பியனார் எழுதிய இலக்கணப்படி நான்கடிகளால் ஆகிய வெண்பாக்களே
இயற்ற வேண்டும்