போலவே தன் தோப்பும் அமைய வேண்டும் என்ற முயற்சி அவனுக்குத் தேவை இல்லை. ஒருகால் அதே அகலமும் நீளமும் வருமாறு தன் நிலத்தை மாற்றியமைத்தாலும் அமைக்கலாம். ஆனால் வெளியூர்த் தோப்பில் கண்ட மரங்களின் உயரமே தன் தோப்பின் மரங்களுக்கும் இருக்க வேண்டும் என்று அவன் முயலுதல் அறிவுடைமையா? முயன்றால் பயன்தான் உண்டா? வெளியூரின் மண்வளம் வேறாக இருக்கலாம்; தன் நிலத்தின் வளம் வேறாக இருக்கலாம்; அதுபோல், வாழும் மக்களின் மனவளம் காலத்திற்கு ஏற்ப ஓரளவு வேறுபட்டு வரக்கூடியது. ஆகையால், இலக்கியத்தின் அகலத்தையும் நீளத்தையும் அளந்து எக்காலத்திற்கும் உரிய விதிகளாக வற்புறுத்தல் தவறு. (We should not invoke the classics to check originality, hamper experiment, or define in advance the lines which the literature of our own time should or should not follow we should not try to make systmes and rules out of them. - Hudson, An Introduction to the study of Literature, P 132.)தோப்பு தென்னந்தோப்பாக இருந்தால் அது போதும்; எழுதும் நூலும் இலக்கியப் பண்பு உடையதாக இருந்தால் அது போதும். | இதை எவ்வாறோ நம் முன்னோர்களும் உணர்ந்து தெளிந்துள்ளார்கள். பிற்காலத்தில் பாட்டியல் என இலக்கணம் இயற்றியவர்கள் தவறான போக்கில் வழிகாட்டிச் சென்ற போதிலும், பண்டைக் காலத்து முன்னோர்கள் தவறவில்லை. இலக்கணம் என்பது இலக்கியத்தை வரையறுத்துக் கட்டுப்படுத்துவது அன்று, இலக்கியம் இவ்வாறு அமைந்துள்ளது என்பதைக் கூறுவதே இலக்கணமாகும் என்ற கருத்து அவர்களுக்கு இருந்திருக்கின்றது. அதனால் தான், | | |
|
|