| எள்ளினின்று எண்ணெய் எடுபடும் அதுபோல் இலக்கி யத்தினின்று எடுபடும் இலக்கணம் | என்ற தெளிவு அக்காலத்தில் இருந்தது. | வின்செஸ்டர் என்னும் ஆங்கிலப் பேரறிஞர், இலக்கியத்தின் விதிகளைப் பற்றிக் கூறும் கருத்து இங்குப் போற்றத்தக்கது. சில விதிகளுக்குக் கட்டுப்பட்டு அமைந்திருப்பதால், ஒரு நூல் இலக்கியம் ஆவதில்லை; ஆனால், இலக்கியமாகப் போற்றப்பட்ட நூல்களைக் கண்டு எழுதியவை. ஆகையால் அவை விதிகளாக உள்ளன என்கிறார் அவர். (A book is not literature because it conforms to certain rules, but rather these rules are valid because they are drawn from admitted works of literature) உண்மைதான்; எள்ளால்தான் எண்ணெய்க்குப் பெயரும் வாழ்வும் அமைகின்றன. எண்ணெயைக் கண்டு எள் பிறப்பதில்லையே! | | |
|
|