பக்கம் எண் :

  17. காகிதப் பூந்தோட்டம்
 
     பாட்டை வேட்கை கொண்டு ஆய்ந்து படித்து உணர வேண்டும்; பிறர்
வற்புறுத்தலால் கண்மூடிப் படித்தால் பாட்டு அதன் பயனைத் தராது; அதற்கு மாறாக,
படித்தவரின் உள்ளத்தில் மாறா வெறுப்பையே விளைக்கும் என்று அறிஞர்
அஞ்சுகின்றனர். (To have a poem flung at one's head by an imperious and imprudently
enthusiastic critic, with the demand that we should surrender ourselves to its power over
our uncritical emotions. perhaps the most certain way to ensure our permanent dislike of
poem - M.R. Ridley; Poetry and the ordinary Reader.)
 
     ஆனால், இந்நாட்டின் பள்ளிக்கூடங்களில் நடப்பது என்ன? முடிவுத் தேர்வு
என்ற ஒன்றைத் தெய்வம் போல் போற்றி வழிபடுவதால், மாணவர்களின் உள்ளத்தை
உயர்த்தவல்ல காலமுறையே அவர்களின் உரத்தை உறிஞ்சவல்ல கொலை முறையாக
மாறி நிற்கிறது. பதவுரை, பொழிப்புரை, அணி, இலக்கணக்குறிப்பு என்ற சில வார்ப்பட
முறைகளுக்குள் ஒவ்வொரு பாட்டையும் அடக்கிவிடும் முயற்சியே போதிக்கும்
முறையாக இருக்கிறது. அதனால் பள்ளிக்கூடச் சிறுவர்கள் படும் தொல்லைகளை
நினைத்தால், அதற்கென ஓர் உரிமை இயக்கமே ஏற்பட வேண்டுமோ என்று
தோன்றுகிறது. சிறுவர்கள் படும் துன்பங்களுக்காகக் கண்ணீர் விட்டுப்