போராடும் இலக்கியக் காந்தி ஒருவரின் தலைமைக்கு எங்கே செல்வது? ஏறக்குறைய எல்லாப் பாடங்களிலுமே இந்த இடர்ப்பாடு உள்ளது. இலக்கியக் கல்வியும் இத்தகைய இடர்ப்பாட்டுக்கு இரையாகியுள்ளது. | இன்றைய மொழிவளர்ச்சிக்கு வேண்டாத பல இலக்கணப் பகுதிகளைத் தமிழ்ச் சிறுவர்கள் கற்று மறக்க வேண்டுமாம். பழைய இலக்கியத்தில் உள்ள பற்று எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது. பழைய இலக்கணத்தை ஆராய்வது ஆராய்ச்சியாளரின் கடமையுமாகும். ஆனால், பழைய இலக்கணத்தில் மாணவர்கள் தோய்ந்து கிடப்பது, தமிழ்நாட்டின் சிறப்பியல்பாக உள்ளது. இந்த வினைக்கொடுமை சிறுவர்களின் மூளையை வந்து தாக்கும்போது தான் வேதனையாக உள்ளது. இலக்கியம் காலம் கடந்தது; மக்களின் உள்ளத்தில் மாறாமல் விளங்கிவரும் உயர்ந்த உணர்ச்சிகளுக்கு வடிவம் தருவது. ஆகவே, காலத்தால் முந்தியதாக இருத்தல் இலக்கியத்திற்கு ஒரு குறை ஆகாமல், சிறப்பே ஆகிறது; பலரும் பலமுறை கற்றுத் தேர்ந்து பயன் பெற்ற இலக்கியம் இது என்று நம்பிக்கை பிறப்பதற்குக் காரணம் ஆகிறது. ஆனால், இலக்கணம் அத்தகையது அன்று. ஒரு காலத்தில் இன்றியமையாதனவாக இருந்த கஃறீது, முஃடீது, செய்கு, செய்கும், இலள், இலன், இலர் முதலான சொற்கள் இன்று மொழிக்குச் சுமையாகிவிட்டன; ஆகவே, இவற்றைப் பற்றிய இலக்கணப் பகுதிகள் வேண்டாதன ஆகிவிட்டன; மொழியியல் கற்பார்க்குத் தவிர, ஏனையோர்க்குப் பயன்படாதன ஆகிவிட்டன. | இவை ஒரு காலத்தில் தேவையாக இருந்து மற்றொரு காலத்திற்குப் பயன்படாதவை. என்றுமே வேண்டாத இலக்கணப் பகுதிகள் சில உள்ளன. அவற்றைத் தண்டியலங்காரத்திலும் மாறனலங்காரத்திலும் காணலாம். குவலயானந்தம் என்ற அலங்கார நூல் | | |
|
|