பக்கம் எண் :

128 இலக்கிய ஆராய்ச்சி
 
அணிகளை நூறு வகைப்படுத்தி விரிவாகக் கூறுகிறது. இந்நூல்களில் கூறப்படும்
சொல்லணிகள் முற்றிலும் வேண்டாதவை.
 
     "இடைக்காலத்துத் தோன்றிய சிலர் சொல்லின்பம் நாடுபவராய்ச்
சொல்லணிகளைப் பெரிதும் வழங்குவாராயினர். இவர்கள், யமகம் திரிபு முதலிய
செய்யுட்கள் பல இயற்றினர். பின்னர்த் திரிபு அந்தாதிகளும் யமக அந்தாதிகளும்
சிலேடை வெண்பாக்களும் அளவிறந்தன எழுந்தன. இவையனைத்தும் பெரும்பாலும்
பொருட் செறிவிலவாய் வீண் சப்த ஜாலங்களாய் மட்டில் முடிந்தன. இக்காலத்தில்
தென்னாட்டிற் புலவர் பலர் யமகம் திரிபு பாடுதலையே பெரிதாக எண்ணி வாணாளை
வீணாளாகக் கழிப்பர்" என்றும், "யமகம் திரிபு உள்ள பாடல்களை உயிரில்லாப்
பாட்டுக்கள் என்றும், கருத்து நலம் கற்பனையுள்ள பாடல்களை உயிருள்ள பாட்டுக்கள்
என்றும் அறிவுடையோர் பலர் கூறக் கேட்டிருக்கின்றோம். இத்தன்மையான
இடர்ப்பாடுகள் நிரம்பிய மிறைக்கவிகள் நம் தமிழ்ப் புலவர்கள் மனங்களைக் கவரா. (வி
கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்) கூறியுள்ள கருத்து இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
 
     ஆகவே, சொல்லணிகள் கனவிலும் கருதத் தகாதவை. பொருளணிகள்
அத்தகையன அல்ல; 'தாமாக அமைவன அமைக' என்று பாடும் புலவர்
கவலைப்படாமல் விடத்தக்கவை அவை. படிப்போரும், இது என்ன அணி, அது என்ன
அணி என்று அவற்றின் பெயர்வகைகளைக் காண்பதில் முயற்சி செலுத்துவது வீணாகும்.
கருத்து நயம் மட்டும் உணர்ந்து கற்பனைத் திறனைப் போற்றிக் கற்பது அமையும்.
ஆங்கிலத்தில் அறிஞர் ரிட்லே பாட்டுக் கலையைப் பற்றி விளக்கிச் சொல்லும்போது,
அணியின் பகுதியில் உவமை, உருவகம் இரண்டையும் எடுத்துக் கொள்கிறார். பிறகு
உடனே, உருவகம் என்பது உவமையின்