பக்கம் எண் :

132 இலக்கிய ஆராய்ச்சி
 
செய்வதற்குத் தாய் செய்ய வேண்டிய கடமையை மறந்து விட்டு, குழந்தையைச்
சவலையாக விட்டுப் பொன்னும் வெள்ளியும் சுமக்கச் செய்வதால் பயன் என்ன?
 
     பிற்காலத்துப் புலவர் சிலர் இந்த உண்மையை உணராத காரணத்தால், எழுத்தும்
சொல்லும் கற்று அணி இலக்கணத்தில் தேர்ந்து, என்னென்னவோ பாடுபட்டு,
எவ்வளவோ செய்யுட்களை இயற்றினர். ஆயின், அந்தச் செய்யுட்களுக்குத் தமிழகம்
நல்ல வாழ்வு தரவில்லை. சிலவற்றிற்கு இரண்டாம் பதிப்புக்கும் வழி இல்லை;
பலவற்றிற்கு முதல் பதிப்புக்கே வாய்ப்பு இல்லை. ஆனால், அகநானூறு, புறநானூறு,
குறுந்தொகை, சிலப்பதிகாரம் முதலானவை இன்றும் போற்றப்படும் இலக்கியங்களாக
வாழ்ந்து வருகின்றன. பாலூட்டி, சீராட்டி வளர்த்து விட்டால் போதும், இயற்கையாகவே
அழகு வந்து அமையும் என்ற உண்மையைப் பாரதியாரும் உணர்ந்தார். அதனால்தான்
அவர் தம் கற்பனை உணர்வைப் பாட்டாய்க் கொட்ட முனைந்தாரே அல்லாமல்,
அவற்றின் தலைமேல் அணிகளைச் சுமத்த முயலவில்லை; அதனால் அவருடைய
உணர்வின் வேகத்தை ஒட்டி ஒலிநயமும் பொருள் நயமும் பின்தொடர்ந்து பணியாற்றும்
நிலைமை உற்றார். "பொருளை விளக்கம் கொள்வதற்காகவே உவமை உருவகங்கள்
பயன்படுத்த வேண்டும்; வாக்கியங்களை அழகு படுத்துவதற்கு மட்டும் என்று
பயன்படுத்தக் கூடாது. சிறந்து அமையும்போது திறனுற நிற்கும் பலவகை அணிகளிலும்
முதலில் குறைந்த அளவானவற்றைப் பயன்படுத்தலே நல்லது. முயன்று தேடாமல்
தாமாக அமையும் அணிகளே தக்கவை எனக் கூறத் தகுவன. ஆகையால், அணிகளை
அமைப்பதில் தயங்குக. (Use similes and metaphors to throw light on your meaning, and not
merely to decorate your sentences..... Indeed, of all figures of speech, which are at their
best artitices, it is as well to be sparing at first.