Those that some of themselves without deliberate search are the most likely to be justifiable.... Be suspicicus, than, of your figures of speech) என்று பாட்டுக் கலையில் தேர்ந்த அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். | ஒருவர் ஒரு பூந்தோட்டத்திற்குச் செல்கிறார். பூக்களின் பலவகை நிறங்களையும் பலவகை மணங்களையும் கண்டு முகர்ந்து மகிழ்கிறார். பூஞ்செடிகளின் இயற்கையழகில் ஈடுபடுகிறார். தம் ஊர்க்குச் செல்கிறார். தாமும் அதுபோல் ஒரு பூந்தோட்டம் வைக்க முயல்கிறார்; ஒவ்வோர் அரும்பையும் பூவையும் புதுநிறத்தையும் புது மணத்தையும் கண்டு கண்டு மகிழ்கிறார். இலக்கிய உலகத்தில் திளைத்த ஒருவர் இயற்றும் பாட்டு அவருடைய தொண்டைப் போன்றதுதான். | அந்தப் பூந்தோட்டத்திற்கு மற்றொருவர் செல்கிறார். அவர் ஒவ்வொரு செடியின் நீளத்தையும் அகலத்தையும் இலை, அரும்பு, பூ முதலியவற்றின் அமைப்பையும் அளந்து அளந்து பேரேட்டில் குறித்துக் கொள்கிறார். அவ்வவற்றின் நிலவகைகளையும் மண்வகைகளையும் விடாமல் குறிப்பெடுத்துக்கொள்கிறார். பிறகு தம் ஊர்க்குச் சென்றதும் பூந்தோட்டம் என்றால் இன்னது, அதில் உள்ள பூக்களின் நிறம் இத்தனை வகை, மணம் இத்தனை வகை. நிறங்களுக்கு இன்னின்ன பெயர். மணங்களுக்கு இன்னின்ன பெயர் என்று எழுதிப் பெரிய நூல் இயற்றுகிறார். அது போன்றதே அலங்கார நூல் அல்லது அணியிலக்கணம் என்பது. | அந்தப் பூந்தோட்ட நூலைப் படித்த ஒருவர், மெல்லிய காகிதங்களையும் குச்சிகளையும் வாங்கி வைத்து, அந்த நூலின் குறிப்புக்களை விடாமல் படித்துப் படித்து, குச்சிகளாலும் காகிதங்களாலும் செடிகளைப் போல | | |
|
|