காரணத்தால், எழுதும்போது உணர்ச்சி குறைந்திருக்கும்; படிக்கும்போது இன்னும் குறையும்; ஆகையால் அவருடைய முகக் குறிப்பு முதலியவை கூட்டத்தினரைச் சேர்ந்து அவர்களுடைய உணர்ச்சியைத் தூண்ட வழி இல்லை; கூட்டத்தினர் ஏதேனும் உணர்ச்சி உற்ற போதிலும், அந்த உணர்ச்சி பேசுவோரின் கண்ணை ஈர்க்காது; ஒருகால் ஈர்த்தாலும், அதனால் அவர் முன்னமே எழுதி வைத்துள்ள கருத்தை மாற்றல் இயலாது. ஆகையால் முன்னேற்பாடாகச் செய்துள்ளவை ஒழுங்காக நடைபெறும்; ஆரவாரமான பேச்சையும் உணர்ச்சிப் பெருக்கையும் விடப் பொறுப்பான கடமையே பெரிது எனக்கொண்ட காரணத்தால், மேடையில் அந்த நேரத்தில் அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி விளையாவிட்டாலும், பிறகு கடமையின்பம் விளையும். மற்றொரு நன்மையும் உள்ளது; எழுதிப் படிக்காவிட்டால், பேசுவோர் முன்பு எண்ணிய கருத்தையே உணர்ச்சி காரணமாகத் திரித்துக் கூற இடம் உண்டு; அவர் உள்ளவாறே பேசிய போதிலும், கேட்போர் தம் உணர்ச்சி காரணமாக அதையே திரித்து உணரவும் இடம் உண்டு; இந்த இருவகைத் திரிபுக்கும் எழுதிப் படிக்கும் முறையில் இடம் இல்லை. இவ்வாறு உணர்ச்சியை நம்பாமல் அறிவை நம்பித் துணையாகக் கொண்டதாலேயே எழுதிப் படிக்கும் சொற்பொழிவு முறை தோன்றியது. | அறிவு அமைதி உடையது; வயல் சார்ந்த பரந்த நிலத்தில் பாயும் ஆறு போன்றது. உணர்ச்சி கானாறு போன்றது; எந்த நிலையில் எந்த நேரத்தில் என்ன தோன்றும் என்று முன்னதாக அளந்தறிய முடியாது. இதுதான் அதன்மேல் நம்பிக்கை பிறக்காததற்குக் காரணம். இன்ன உணர்ச்சி தான் தோன்றும் என்று எதிர்பார்க்க முடியுமானால், பொறுப்புள்ளவர்கள் அதை வெல்லும் முயற்சியில் ஈடுபடத் தேவையே இல்லை. வாழ்க்கை என்னும் | | |
|
|