இயற்றல் வேண்டும்? அப்படியானால், பாட்டு முன்னமே எழுதி முடிந்திருத்தல் வேண்டும்; தான் பாடக் கருதியது இன்னது என்பது, பாடி முடித்த பிறகே கவிஞனுக்குத் தெரியும். தொடங்கியபோதே, பாடிக்கொண்டிருக்கும் போதே, அவனுக்கு அது தெரியாது; அவன் அதன் வயமாக இருக்கிறான்...." (Pure poetry is not the decoration of a preconceived and clearly defined matter; it springs from the creative impulse of a vague imaginative mass pressing for development and definition. If the poet already knew exactly what he meant to say why should he write the poem? The Poem would in fact already be written, For only its completion can reveal, even to him, exactly what he wanted. When he began and while he was at work, he did not possess his meaning; if possessed him) என்று ஏ.சி. பிராட்லே என்னும் அறிஞர் (Poetry for poetry's Sake என்னும்) தம் ஆராய்ச்சியுரையில் கூறியது இங்கு கருதத்தக்கது. | உணர்ச்சியின் வயமாக இருந்து கவிஞன் பாடுவதால், பாட்டு உயர்ந்த கலை ஆகிறது; உலகம் அதைப் போற்றுகிறது. ஆனால், பேச்சினிடையே உணர்ச்சிக்கு ஆளாக நேருமே என்று அஞ்சுவதால், பொறுப்புள்ள அதிகாரிகள் எழுதிப் படிக்கிறார்கள்; உலகம் அவர்களுடைய அறிவைப் போற்றுகிறது. உணர்ச்சிக்கு ஓர் இடம்; அறிவுக்கு ஓர் இடம்; இரண்டையுமே உலகம் போற்றுகிறது? வேறு வேறு காரணம் பற்றிப் போற்றுகிறது. | கலையாக இருக்க வல்ல சொற்பொழிவைச் சடங்குக்குப் பயன்படுத்த முயலும்போது எழுதிப் படிக்கிறார்கள்; பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவு முதலியவை சடங்குகளே. இத்தகைய சடங்குகள் வாழ்க்கைக்கு வேண்டியவைகளே. ஆனால், பாட்டு என்னும் விழுமிய கலையையும் சடங்குக்குப் பயன்படுத்த உலகம் முயல்வது வருந்தத்தக்கதாக இருந்தது. | | |
|
|