பக்கம் எண் :

19. உள்ளத்தின் ஒளி  
 
     எட்டுத் திங்கள் ஆனதும் குழந்தை எடுத்து அடி வைக்கிறது; என்றோ ஒரு நல்ல
நாளில் இவ்வாறு அடி எடுத்துவைத்து நடக்கக் கற்றுக்கொள்கிறது. சில ஆண்டுகள்
கழித்து அந்தக் குழந்தையைப் பார்த்தால், நடப்பதைப் பற்றி அது ஒரு சிறு முயற்சியும்
செய்வதாகத் தெரியவில்லை. நடக்க வேண்டும் என்று அதன் மனம் எண்ணியவுடனே,
கால்கள் தாமாகவே இயங்கும் அளவிற்கு நடை இயற்கையாகி விடுகிறது.
 
     நடக்கக் கற்றுத் தேர்ந்த பிறகு தடை இயற்கையாகி விடுகிறது. நடக்கும்
முயற்சியோ, அதைப் பற்றிய எண்ணமோ ஒன்றும் தோன்றுவதில்லை.
 
     வளர்ந்த மனிதன் நடப்பதற்கு முயற்சி செய்வதாகத் தெரிந்தால், ஒன்று கீல்வாயு
முதலான நோய் காரணமாக இருத்தல் வேண்டும்; அல்லது முதுமையின் தளர்ச்சி
காரணமாக இருத்தல் வேண்டும்.
 
     ஐந்து வயதுள்ள சிறுமி மணலில் எழுதி, பிறகு பலகையில் எழுதி அ ஆ இ ஈ
என்று ஒவ்வோர் எழுத்தாகக் கற்றுக் கொள்கிறாள். சில ஆண்டுகள் கழித்து அவள்
கடிதம் எழுதும்போது, அந்த எழுத்துக்களை எப்படி வளைக்க வேண்டும். எப்படி
நீட்டவேண்டும், எப்படிப் புள்ளி கோடு முதலானவை இடவேண்டும் என்றெல்லாம்
எண்ணுவதில்லை; தயங்குவதில்லை; சிறு முயற்சியும்