இவ்வாறு அமையாதபோது சிலர் திகைப்படைந்து இலக்கணமே வேண்டா என்னும் எல்லைக்குச் சென்று நின்று கொள்வர். உண்மையாக ஆராய்ந்தால், அவர்கள் எழுதும் எழுத்திலும் ஓர் ஒழுங்குமுறை இருக்கும்; இருக்க வேண்டும்; இப்படிப் பலர்க்கும் பொதுவாக அமைந்துள்ள ஒழுங்கு முறைக்கே இலக்கணம் என்று பெயரிட்டுள்ளனர்.
| அந்த இலக்கணத்தை வரையறுத்து எழுதிய வகையில் சில தவறுகளும் புகுந்திருக்கலாம்; அவை களையப்படல் வேண்டும். பொருந்தாப் பழைய விதிகளும் சில இடம் பெற்றிருக்கலாம். அவை மறக்கப்படல் வேண்டும். காலத்திற்கு ஏற்ப, புதியனவாகச் சில அமையவேண்டியும் இருக்கலாம். அவை அமைக்கப்படல் வேண்டும். இல்லை, உண்டு முதலானவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக வழங்கிய வரலாறு இப்படிப்பட்டதே. சந்தி பிரித்துத் தெளிவுறக் குறியீடுகளை இட்டு எழுதும் பாரதியார் அங்குக் கண்டான், இங்குச் சென்றான் என்றெல்லாம் எழுதாமல் அன்று கண்டான், இன்று சென்றான் முதலியன போல் அவற்றில் வல்லினம் மிகாமல் எழுத விரும்பிய காரணமும் இத்தகையதே. | இவ்வாறு மொழியின் அமைப்பு முறையே இலக்கணம் எனப் போற்றாமல், இலக்கணம் வேண்டா எனத்தூற்றுவது கண்மூடித் தன்மையாகும்; நடக்கும்போது கால்களை முறைப்படி மாற்றி மாற்றி வைக்க வேண்டா என்றும், எழுதும்போது கோடுகளிலும் வளைவுகளிலும் அளவு வேண்டா என்றும் மறுப்பது போன்ற கண்மூடித் தன்மையே ஆகும். ஆனால், அதற்கு மாறாக, கதையும் கட்டுரையும் எழுதும் கருத்து வளம் பிறந்த பிறகும், இலக்கணம் பயின்று பலகாலம் கழிந்த பிறகும், அந்த விதிகளை நினைத்துக் கொண்டும் அவற்றையே போற்றிக் கொண்டும் காலம் வீணாக்குவதும் குறைபாடே ஆகும். திருமணம் ஆனபின் மணலில் எழுதிக் காண்பவனுக்கும் தோழனாகவே இந்த இலக்கணப் புலவனைச் சேர்க்க | | |
|
|