பக்கம் எண் :

146 இலக்கிய ஆராய்ச்சி
 
வேண்டும். இதை வற்புறுத்துவதற்காகவே, ஆங்கிலத்தில் இலக்கணத்தைப் போற்றுவதில்
தேர்ந்தவன் இலக்கணத்தில் தேர்ந்தவன் அல்லன். அதைப் போற்றுபவன்
எழுத்தாளனாகத் தகுதியற்றவன் (The best grammarian is the worst writer) என்ற
புதுமொழி வழங்கலாயிற்று. இலக்கணப் புலமையும் இலக்கியப் படைப்பும் ஒருங்கே
பொருந்துவன அல்ல என்றும், இலக்கணத்தை மிகப் போற்றல் கருத்தை நன்கு
புலப்படுத்துவதற்குத் தடையாதலும் உண்டு என்று கவிஞர் தாகூர் கருதுகிறார்(The
Mastery of grammar and the creation of literature may not coincide Emphasis upon
grammar may hinder perfectness of expression)
 
     இசை, நாடகம், ஓவியம், காவியம் முதலான சுவைகளுக்கும் இந்த உண்மை
பொருந்தும், இசை, நாடகம் முதலியவற்றைக் கற்கத் தொடங்கும் நிலைமை வேறு;
கற்றுத் தேர்ந்த நிலைமை வேறு. தொடக்கத்தின்போது இசை வேறு, தான் வேறாக
இருந்தது போலவே இராமல், இசை மயமாகத் தான் விளங்கவேண்டும்; நாடகம் தனக்கு
இயற்கையான ஒரு கலையாகிவிட வேண்டும்; ஓவியம், அகக்கண் கண்டதைப்
புறக்கண்ணிற்குக் காட்டும் இயல்பான சுவையாக வேண்டும்; பாட்டு உள்ளத்தின்
உணர்ச்சியைச் சொல் வடிவாக வடிப்பதற்குத் தானாகவே உற்றபோது வந்து உதவ
வேண்டும்.
 
     சிறந்த கவிஞனுக்குச் சீரும் தளையும் எதுகையும் மோனையும் இயல்பாக வந்து
உதவ வேண்டும். கவிஞன் உணர்ச்சியை வடிக்கத் துடிக்க வேண்டுமே அல்லாமல்,
எதுகை மோனையையும் சீர் தளையையும் எண்ணித் தயங்கி நிற்கக் கூடாது. உணர்ச்சிப்
பெருக்கு இல்லாத யாப்பிலக்கணம் பயின்ற தொடக்க நிலையில் சீர், தளை, எதுகை,
மோனை முதலியவற்றை நாடி அமைத்துக் கற்றல் வேண்டியது தான். ஆனால் சில
ஆண்டுகள் கழிந்த பிறகும் அவற்றையே நாடிக்கொண்டு இருப்பானானால், அவன்