பக்கம் எண் :

விட முடியாதது 149
 
     "கவிஞர்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி அற்றவர்கள்;
ஆண்மையுள்ள நல்ல மனிதன் ஒருவன் கவிஞனைவிடச் சிறந்தவன். கவிஞர்கள்
உண்மை போன்றதை விளக்குகின்றார்களே தவிர. உண்மையை உள்ளவாறு
அறியாதவர்கள். ஒன்றைப் போல் கற்பித்துக் கூறுதல் வேடிக்கையை நோக்கமாகக்
கொண்டதே தவிர, உண்மையை உணர்த்தும் ஆர்வம் இல்லாதது. நல்ல ஆட்சி
நிலவவேண்டிய நகரத்திலிருந்து கவிஞர்களை வெளியேற்றுவது கடமையாகும்.
இல்லையானால், நகரத்து மக்களை அவர்கள் கெடுத்துவிடக் கூடும். நல்லாட்சி நிலவும்
நகரத்தில் பாட்டுக் கலை வாழ்வதற்கு உரிய தகுதி ஏதேனும் உண்டா? இன்பம் பயப்பது
தவிர அதற்கு வேறு நோக்கம் உள்ளதா? இன்பம் பயத்தல் மட்டும் அல்லாமல்,
அரசியலின் நல்லமைப்புக்கும் மனித வாழ்க்கையின் நன்மைக்கும் அது பயன்படுகிறது
என்று பாட்டுக் கலையைப் போற்றும் அன்பர்கள் நிறுவிக்காட்டட்டும். உண்மையான
ஆர்வம் உள்ளதாகக் கருதி அதை போற்றக்கூடாது. அதற்கு மாறாக, அதைப் பற்றி
மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். நகரத்தின் நன்மையைக் கருதியாவது இந்த
அச்சம் இருக்க வேண்டும். ஒரு மனிதன் புகழாலும் பணத்தாலும் பதவியாலும்
கெடுவதுபோல் பாட்டாலும் கெடுவதற்கு இடம் உண்டு. அது காரணமாக நீதியையும்
அறத்தையும் மனிதன் புறக்கணிக்காத படி காத்துக் கொள்ள வேண்டும்" என்று உலகப்
பேரறிஞர்களில் ஒருவராகிய பிளாட்டோ (Plato: The Republic) எழுதுவரானால், அதில்
ஓரளவேனும் உண்மை இல்லாமல் போகாது.
 
     பொதுவாக, கலை என்பது உணர்ச்சியை உயிராகக் கொண்டது. பாட்டுக் கலையில்
அறிவுக்கும் ஓரளவு இடம் இருப்பினும், உணர்ச்சிப் பெருக்கே அதன் உயிர்
வாழ்வாகும். உணர்ச்சி எப்போதும் ஒருதலையானது; நடு