உரிய காலமும் இனி வரும். ஆயின், அது வரையிலேனும் பாட்டுக் கலையை ஒதுக்க முடியுமோ என்றால் அது முடியாது. உடலுக்குப் பாட்டு இன்றியமையாதது; விட முடியாததும் ஆகும். மற்றக் கலையைவிடப் பாட்டுக்கு உள்ள தனிச் சிறப்பு இதுவாகும். | மக்களின் வாழ்க்கையில் இசைக்கு அடுத்தபடியாக, இசையை விடவும் மிகுதியாகப் போற்றப்படும் சிறப்பு, பாட்டுக் கலைக்கு அமைந்துள்ளது. இசை எந்த அடிப்படை ஒழுங்கின்மேல் அமைந்ததோ, அதே போல் அமைந்ததே பாட்டும் ஒலிஒழுங்கும் ஒலிநயமும் (Rhythm) இல்லையானால் இசை இல்லை; பாட்டும் இல்லை. செவிப்புலன் அறவே இல்லாத ஊமர்க்கு இசையும் தெரியாது; பாட்டும் தெரியாது. ஆகவே, இசைக் கலை போலவே அமைந்து அதன் மேலும் வளர்ச்சி பெற்றது பாட்டு எல்லாம். பாட்டில் அமைந்துள்ள ஒலிநயம் ஓவியம் சிற்பம் முதலியவற்றில் அமைந்துள்ள ஒழுங்கு முறையை விடச் சிறந்தது. காரணம், ஒலிநயம் உடலிலுள்ள நாடி நரம்புகள் எல்லாவற்றையும் கவர்ந்து தன்வயப்படுத்த வல்லது. அதனால் தான், உரைநடை நூல்கள் ஒரு முறை இரு முறைக்குமேல் படிக்க முடியாமல் சலிக்கும் போது, பாட்டுக்களாகிய நூல்கள் மட்டும் பலமுறை படித்தாலும் சலிப்பு இல்லாமல் இன்பம் பயந்து வருகின்றன. வீணை, குழல் முதலான கருவிகளின் இசையில் ஒலிநயம் மிகச் சிறப்பாக அமைந்திருப்பினும், கற்பனை விருந்து இல்லை. உரைநடையில் இல்லாத ஒலிநயம், இசையில் இல்லாத கற்பனை விருந்து ஆகிய இரண்டு பாட்டில் போதிய அளவுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. ஆகவே ஒலிநய வேட்கையும் கற்பனை வேட்கையும் உள்ள வரையில் பாட்டுக் கலையை மனிதன் விடவே முடியாது. | இரண்டாவதாக ஆடைக்குப் பருத்தி வேண்டியிருப்பது போல், ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொருவகை | | |
|
|