அந்நிலையில் அவருடைய உள்ளத்தின் நோயை மாற்றவல்ல மருந்தாக வந்து உதவியவை வோர்ட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவிஞர் பாடிய பாட்டுக்களே ஆகும். | வாழ்க்கை பல பசிகளை உடையது. அறிவுப் பசி மட்டும் உடையவர்களாகப் பிறக்கும் மக்கள் பாட்டுக் கலையைத் துறக்கவும் முடியும். ஆனால், மக்கள் பெரும்பாலோர் உணர்வுப் பசியும் உடையவர்கள். அதனால் தான் பாட்டுக் கலை விட முடியாததாக விளங்குகின்றது. | ஆகவே, பாட்டுக் கலையை ஒரு காரணம் பற்றி வெறுத்தலும் புறக்கணித்தலும் வேண்டா. அது வாழ்வுடன் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பை உள்ளவாறு அறிந்து, அதை வாழ்வுக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக் கொள்வதே கடமையாகும். | | |
|
|