பக்கம் எண் :

21. அறிவியலும் இலக்கியமும்  
 
     அறிவியல் (Science) என்பதற்கு மாறானது ஒன்று உண்டு என்றால் அது கலை
எனலாம். அறிவியல் எங்கே அறிவியலாக விளங்காமல் நிற்கிறதோ, அங்கே பாட்டுக்
கலை தொடங்குகிறது; அங்கிருந்து அறிவியலால் உணர்த்த முடியாத உண்மையை
உணர்த்துகிறது; உணர்வுலகத்தில் அதற்குள்ள தொடர்பையும் கற்பனையின்பத்தை
விளைப்பதில் அதற்குள்ள ஆற்றலையும் புலப்படுத்துகிறது என்கிறார், அறிஞர் ஒருவர்.
(Poetry begins where matter of fact or science ceases to be merely such and begins to
exhibit a further truth, the connection it has with the world of emotion, and its power to
produce imaginative pleasure - Leigh Hunt.)
இவ்வாறு அறிவியல், இலக்கியக் கலைக்கு
மாறுபட்டு நிற்பது மட்டும் அல்லாமல், இலக்கியத்தின் வாழ்வில் அது பற்பல
மாறுதலையும் ஏற்படுத்தி வருகின்றது. இலக்கியத்தின் வாழ்வில் அறிவியல் ஏற்படுத்தும்
மாறுதல்கள், மக்களின் புறவாழ்வில் அது ஏற்படுத்தும் மாறுதல்களை ஒட்டியவைகளே.
மக்களின் புறவாழ்வு உற்ற மாறுதல்களை நோக்கும் போது, இலக்கியம் உற்ற மாறுதல்
மிகக் குறைவு என்றே கூறலாம்.
 
     எடுத்துக்காட்டாக, சென்ற நூற்றாண்டின் பல கருவிகள் இந்த நூற்றாண்டில்
அவ்வளவாகப் பயன்படவில்லை, சில கருவிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து
போயின;